Wednesday, September 17, 2008

ஆர்கியோமெட்டலர்ஜி




மனிதன் பரிணாம வளர்சியடைய ஆரம்பித்ததிலிருந்து இன்றுவரை, உலோகங்கள்ளின் பங்கு அளப்பரியமுடியாதவை. “மெட்டலர்ஜி” என்பது உலகின் இரண்டாவது மிக பழைமையான தொழில்.(முதல் என்ன என்பது உங்களுக்கே தெரியும்.). ஆர்கியோமெட்டலர்ஜி என்ற புதிய இயலில் இன்று பல ஆரய்சிகள் நடைபெறுகிறது.
தொல் பழங் காலத்தில் நமக்கு தங்கம், வெள்ளி, பித்தளை,வெண்கலம், ஈயம் போன்ற பல உலோகங்களை உற்பத்தி செய்யும் அறிவு இருந்திருக்கிறது. இதற்கு சாட்சியாக அடிக்கடி குறிப்பிடும் குதுப்மினாருக்கு அருகில் உள்ள, இன்றும் துருப்பிடிக்காத இரும்புக் கம்பம்.
கி.மு.8000-த்திலிருந்து தங்கமும், பித்தளையும் தோண்டி எடுக்கப் பட்டிருக்கின்றன. 6500-லிருந்து தாதுப் பொருள்களிலிருந்து தங்கமும், செம்பையும் பிரிக்கப்பட்டன. தற்செயலாக வெண்கலமும் கண்டுபிடிக்கப்பட்டு, அப்போதிலிருந்தே மணியோசை தொடங்கியிருக்கிறது. சிந்துவெளி நாகரிகத்தில் ஈயம் இருந்திருக்கிறது. தகரம் கி.மு.1000-த்திலுருந்து பயன்பட்டிருக்கிறது. கி.மு750-ல் பாதரஸமும், கி.மு.500-ல் வைரமும், சமஸ்கிருத பதிவுகளில் சொல்லப்பட்டிருக்கிறது. நம் இந்திய உலோகவியல் திறமைகளுக்குச் சாட்சியாக கி.பி 400-லிருந்து நிற்கிறது அந்த இரும்புக் கம்பம்.
மனித சரித்திரத்தில் கற்காலம், வெண்கல யுகம், இரும்பு யுகம் என்பது போல், நவீன அறிவியலின் சரித்திரத்தில் நான்கு ‘மணல் யுகங்கள்’ சொல்கிறார்கள்.
முதல் மணல் யுகத்தில், மணலை மனிதன் உருக்கி, கண்ணாடி செய்து, லென்ஸ் செய்து, டெலஸ்கோப் கண்டுபிடித்தபோது, வானில் கிரகங்கள்ளையும் நட்சத்திரங்களையும் பார்க்க ஆரம்பித்தான். அதிலிருந்து நவீன காஸ்மாலஜி துவங்கியது.
இரண்டாவது மணல் யுகம், அதே லென்ஸ்களைத் திருப்பிப் போட்டு மைக்ராஸ்கோப் செய்தபோது, நுட்பமான ஜந்துக்களையும், பாக்டீரியா போன்ற உயிர்களையும் கவனித்தான். அதிலிருந்து மாலிக்யூலர் பயாலஜிக்கு வித்திட்டு, உயிரின் ரகசியம் வரை வந்துவிட்டான்.
மூன்றாவது மணல் யுகம், சிலிக்கானிக் சில்லு புரட்சி. அதை வைத்துக்கொண்டு கம்யூட்டர் செய்து, மன வேகத்தை விரிவுபடுத்திக் கொண்டான்.
நான்காவது மணல் யுகம், ஃபைபர் ஆப்டிக் கண்ணாடி நூலிழைக்ளின் மூலம் இந்டர்நெட் செய்தி தகவல் வெள்ளம், அதனால் உலகத்தையே ஒரு கிராமமாக்கினான்.
சரி மனிதன் பரிணாம வளர்சியின் உச்சமா அல்லது மேலும் பரிணாம வளர்சியடைவானா என்று ஒரு ஆயிரம் வருடம் பொறுத்திருந்து பார்ப்போம்.

2 comments:

VJR said...

அருமை நண்பர் பாலாஜி அவர்களுக்கு
கணேஷ் முருகனின் வணக்கங்கள்.தங்களின்
எழுத்து நடை மிக அருமை.சொல்லும் விதம்
அர்மையோ அருமை.தொய்வில்லாமல் தொடர்ந்து
எழுத கேட்டுக்கொள்கிறேன்.

Anonymous said...

ஐயோ ஐயோ தூங்குனது போதும், எழுந்து வாங்கன்னேன்...

கணேஷ்முருகன்