Showing posts with label சிரிப்பு திட்டம். Show all posts
Showing posts with label சிரிப்பு திட்டம். Show all posts

Sunday, May 29, 2011

சமச்சீர் சிரிப்பு திட்டம்


இந்த வருடம் ஆரம்பிப்பதாய் இருந்த சமச்சீர் கல்வியை ஜெயலலிதா நிறுத்தியிருக்கிறார். அள்ளித் தெளித்த அவசரத்துடன் ஆரம்பிப்பதாய் இருந்த சமச்சீர் கல்வியை நிறுத்தியதில் சில நியாயமான காரணங்கள் இருக்கத்தான் செய்கின்றன. எனக்கென்னமோ கருணாநிதி தனது தோல்வி தெரிந்தே இதை அமுல்படுத்த விழைந்திருக்கலாம் என்று தோன்றுகிறது.

கீழே கொடுத்திருப்பது இந்த வருடம் பத்தாம் வகுப்பு மாணவர்கள் படித்திருக்க வேண்டிய தெய்வாதீனமாகத் தப்பித்த - சமூக அறிவியல் புத்தகத்தில் இருந்து சில வரிகள். இதில் உள்ள சொற்பிழை, பொருட்பிழை, இலக்கணப் பிழைகள், சொற்றொடர் அமைப்புச் சிக்கல்கள் எதற்கும் நான் பொறுப்பில்லை. புத்தகம் முழுவதுமே ஒரு சிறந்த நகைச்சுவை நூலை வாசித்த உணர்வைத் தரும். படித்து சம்ச்சீர்க் கல்வியை சிப்பாய் சிரியுங்கள்

  • காமராஜர் தமிழக முதலமைச்சராக ஒன்பது ஆண்டுகள் பணியாற்றினார். பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்தினார். மதிய உணவுத்திட்டம், புதிய பள்ளிகளைத் திறந்து, இலவச கல்வி வழங்குதல், வேளாண்மையை மேம்படுத்துதல், கால்வாய்களை வெட்டுதல், அணைகளைக் கட்டுதல் மற்றும் புதிய தொழிற்சாலைகளை அமைத்தல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டார். தேசிய அரசியலில் முக்கிய பங்கு வகித்தார். இதனால் அரசரை உருவாக்குபவர் எனப் போற்றபட்டார்.
  • சாது மகாராஜா மூங்கிர் மாவட்டத்திலுள்ள செல்வச் செழிப்பான குடும்பத்தில் பிறந்தார். இவர் வைணவராக மாறினார். இவருக்குமுன் இவரது குடும்பத்தினர் அனைவரும் சைவ சமயத்தை சார்ந்து சிவனை வழிபட்டனர்.
  • சுற்றுச்சூழல் அனைவருக்கும் சொந்தமானது. ஒவ்வொருவரின் தேவையை பூர்த்தி செய்யக்கூடியதே அன்றி ஒவ்வொரு மனிதனின் பேராசைகளை அல்ல. பெருகிவரும் பேராசை நம்மை மிகவும் கடினமான சூழலுக்கு வெவ்வேறு பிரச்சனைகளாக கொண்டு செல்கிறது.
  • 1858ஆம் ஆண்டு நவம்பர் 1ம் தேதி இந்தியாவின் கடைசி தலைமை ஆளுநரும் முதலாம் வைசிராயும் ஆன கானிங் பிரபு அலகாபாத்தில் நடைபெற்ற மாபெரும் கூட்டத்தில் விக்டோரியா மகாராணியின் பேரறிக்கையை வெளியிட்டார். அது இந்திய மக்களின் மகாசாசனம் என்று கருதப்பட்டது. இப்பேரறிக்கையின் படி இந்தியாவின் ஆட்சிப் பொறுப்பை இனி இங்கிலாந்து அரசி நேரடியாக மேற்கொள்வார் என அறிவிக்கப்பட்டது. எனவே அவருக்கு பதிலாக அவரது பிரதிநிதி இந்தியாவின் ஆட்சிப் பொறுப்பை மேற்கொள்வார் என அறிவிக்கப்பட்டது.
  • கி.பி. 1939 முதல் கி.பி. 1945 வரை நடைபெற்ற இரண்டாம் உலகப்போர், உலகளாவிய ஒரு பெரும் போராக கருதப்படுகிறது.
  • ஹிட்லர் ஜெர்மனியின் பெருமையை வெளிப்படுத்தினார். ஜெர்மானியர்கள் உலகின் மிக உயர்ந்த இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பதில் அவர் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தார். நார்டிக் ஜெர்மானிய இனத்தினர் மிக உயர்ந்தவர்கள் என்றும், செமிடிக் யூதர்கள் மிகவும் தாழ்ந்தவர்கள் என்றும் கருதினார். நார்டிக் இனத்தின் தனித்தன்மையைக் காக்கும் பொருட்டு செமிடிக் யூதர்களை வெறுத்து ஒதுக்கினார். அவரது வெறுப்பின் உச்சக்கட்டமே யூதர்களின் படுகொலை ஆகும். ஹிட்லர் செயல்பாடு, வன்முறை தீவிரவாதம் ஆகியவற்றில் நம்பிக்கை கொண்டிருந்தார். மக்கலின் உரிமைகள் பறிக்கப்பட்டன… [மேலும் நீளும் இப்பகுதியின் தலைப்பு ஹிட்லரின் சாதனைகள்’]
  • கி.பி. 19-ஆம் நூற்றாண்டின் ஆட்சியாளர்கள் மற்றும் அறிவியல் அறிஞர்கள் எதிர்பார்த்த வண்ணம் உலக அமைதிக்கு ஏற்பட்ட பங்கமே முதல் உலகப்போர் என்று கருதப்படுகிறது.
  • பல மில்லியன் வருடங்களுக்கு முன்பு ஒரே ஒரு நிலப்பகுதிதான் இருந்தது. இதைச் சுற்றி பெருங்கடல்கள் சூழ்ந்திருந்தன. இவ்வாறு இருந்த நிலப்பகுதிக்கு பாஞ்சியாஎன்றும் அதைச் சுற்றியுள்ள நீர்ப் பகுதிக்கு பாந்தலாசாஎன்றும் அழைக்கப்பட்டது. இவ்வாறு பரந்த நிலப்பகுதி இரு பகுதிகளாகப் பிரிந்தது.
  • இராமகிருஷ்ண இயக்கம், இராமகிருஷ்ண பரமஹம்சரின் பெயரை அடிப்படையாகக் கொண்டு ஏற்படுத்தப்பட்டது. இது ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனம். சுவாமி விவேகானந்தர் என்பவரால் 1897 ஆம் ஆண்டு மே 1ம் நாள் துவங்கப்பட்டது.
  • வல்லரசு நாடுகளின் பெருந்தலைவர்கள் தங்களது கொள்கைகளை மறந்து போலியான அமைதி கொள்கையினைப் பின்பற்றினர். அவர்களது கொள்கையினை ஏகாதிபத்திய நாடுகள் ஏற்றுக்கொள்ள மறுத்தன. இது இரண்டாம் உலக போருக்கு வழி வகுத்தது.
  • பன்னாட்டு நிறுவனங்கள் என்பது பல நாடுகளில் தங்களது தொழிற் நிறுவனங்களை தொடங்கி நடத்தி வரும் அமைப்புகளாகும்.
  • பொருட்கள் என்பது உற்பத்தி செய்யப்பட்ட கார்கள், இரு சக்கர வாகனங்கள், கப்பல்கள், இரயில் எஞ்சின்கள், பேனா, பென்சில், அரிசி, கோதுமை மற்றும் சமையல் எண்ணை போன்ற பொருட்களைக் குறிக்கும்.
  • இந்திய மொழிகளின் வளர்ச்சி இந்திய இலக்கியங்கள் உன்னத நிலையை அடைய உதவுகின்றன.

இதைப்போல்தான் மற்ற புத்தகங்களும் தயாரிக்கப்பட்டிருக்கும். வரும் முன் காப்ப்தே நல்லதில்லையா.

நன்றி : writerpara