அன்பிற்க்கும் மரியாதைக்குரிய டாக்டர் அப்துல் கலாம் எழுதிய கட்டுரை, நீண்ட காலமாக எந்த பத்திரிக்கைகளிலும் இதுவரை வசிக்க வில்லை அற்ப்புதமாக இருந்தது. மயிர் கூச்சரிய வைத்தது.
இந்த கட்டுரையை மதிப்பீடு செய்ய நான் ஒரு அணு விஞ்ஞானி அல்ல என்ற போதும், இந்த கட்டுரை மற்றும் அணு சக்தி மீது பொதுவான என் எண்ணங்களை வெளிப்படுத்த விரும்புகிறேன்.
இன்னும் 20 - 30 வருடங்களில் மின்சார தேவை நாட்டின் பொருளாதாரத்திற்க்கு இன்றியமையாதது. நிலக்கரி மற்றும் பெட்ரோலிய பொருட்கள் போன்ற படிம எரிபொருட்களின் உபயோகத்தால் ஏற்ப்படும் சூழல் மற்றும் மாசு பிரச்சினைகள், இதற்க்கு மாற்றாக சுத்தமான சூரிய , காற்று மற்றும் அணு சக்தி தேவை , இதெல்லாம் சரிதான் அனால் எனக்கு சில கேள்விகள் இந்த கட்டுரையில் விளக்கபட்டாமலிருப்பதாக படுகிறது
உலகின் அணு விபத்துக்கள்
கடந்த 60 ஆண்டுகளில், 1957 ல் kyshtym முதல் இன்றைய Fukushima வரை உலகில் 4 முக்கிய அணு ஆலை விபத்துக்கள் நிகழ்ந்திருக்கின்றன. இதில் அமெரிக்கா மைல் தீவுகள் மற்றும் 1986 ஆம் ஆண்டு ரஷ்யாவில் நடந்த செர்னோபில் விபத்துக்கள் மனித பிழை காரணமாக நடந்து உள்ளன. மற்ற 2 விபத்துக்கள் இயற்க்கையால் ஆன விபத்துக்கள்.
உலக புள்ளிவிவரங்களை பார்த்தால் அடிப்படையில் 90% மனித பிழை காரணமாக உள்ளன என்று கூறப்படுகிறது. அறிவியல் முன்னேற்றத்தால் கட்டமைப்புக்கள் சரியாக இருந்தாலும் மனித பிழையால் உயிரிழப்புக்கள், சொத்து மற்றும் சுற்றுப்புற சேதாரம் முக்கிய பங்கு வகிக்கிறது.
மனிதப்பிழைக்கு இரண்டு உதாரணங்கள் போபாலில் யூனியன் கார்பைட் சம்பவம் மற்றும் மெக்ஸிக்கோ வளைகுடா சமீபத்திய எண்ணெய் கசிவு. அணு அல்லாத விபத்துக்கள் இவை என்றாலும் நாம் இன்றும் இந்த இரண்டு விபத்துகளுக்கும் வருந்திக் கொண்டிருக்கிறோம்.
நடந்த 4 அணு உலை விபத்துக்களில் இரண்டு மனிதப் பிழையால் நடந்திருக்கின்றன. இதில் மனிதனால் செய்யப்பட்ட பிழையன ஹிரோஷிமா நாகசாகியை சேர்க்கவில்லை
ஒரு அணு உலை என்பது கட்டுப்படுத்தப்பட்ட விளைவுகள் என்றாலும் மனிதனால் (பிழையால் மற்றும் பயங்கரவாதிகளால்) ஏற்பட்டாது என்பதற்க்கு ஏதேனும் அத்தாட்சி இருக்கிறதா.
தொழில்நுட்பம் மட்டுமே எல்லாம் செய்துவிடாது என்பது என் தாழ்மையான கருத்து.
60 ஆண்டுகளில் 441 அணு உலைகளில் 4 சம்பவங்கள் தான் என்பது ஒப்பீட்டளவில் மிகவும் சிறிய சதவீதம்தானே என்று விவாதிக்க முடியும். விமானம், தொழிற்ச்சலை, சாலை விபத்துக்களால் ஆயிரக்கணக்கானோர் உயிரிழக்கிறார்கள். இதனை ஒப்பிடும் போது அணு உலை விபத்துக்களால் ஏற்ப்படும் இறப்புக்கள் குறைந்ததாகவே புள்ளிவிவரங்கள் கூறுகின்றன, என்றும் விவாதிக்கலாம்.
அணுசக்தி அல்லாத மற்றும் அணுசக்தி நிகழ்வுகளுக்கு இடையில் ஒரு பெரிய வித்தியாசம் உள்ளது. அணுசக்தியில்லாத நிகழ்வுகள் ( போப்பால் தவிர்த்து) காலம் மற்றும் எல்லைக்கு உட்பட்டது. கதிர்வீச்சின் தலைமுறைகள் தாண்டியும் நெடுங்காலம் விளைவுகளை கொண்டிருக்கின என்பது மக்களின் நம்பிக்கை.
1987ல் Piper Alpha எண்ணெய் மற்றும் எரிவாயு ஆய்வு விபத்தால் 167 பேர் இறந்தார்கள்,
நிகழ்வுகள் Vs தாக்கம்:( Probability Vs Impact:)
பொறியியலில் இடர் பகுப்பாய்வில் (Risk Anlysis) ஒவ்வொரு சாத்தியமான ஆபத்து, நிகழ்வு Vs தாக்கம் நிகழ்தகவு ஆராயப்படும். இதில் சில சந்தர்ப்பங்களில் நிகழ்வுகள் அதிகமாக இருக்கும் ஆனால் பாதிப்பு குறைவாக இருக்கும். சில சந்தர்ப்பங்களில், நிகழ்வுக்ள் குறைவாக இருக்கம் ஆனால் தாக்கம் அதிகமாக இருக்கும்.
அணுசக்தி ஆலைகளை எடுத்துக்கொண்டல் நிகழ்வுகள் மிக மிக குறைவாக இருக்க ஆனால் தாக்கம் மிக அதிகமாக முடியும். கலாம் அய்யா கூடங்குளம் நிகழ்வு தாக்கம் பகுப்பாய்வு அறிக்கையை ஆராய்திருப்பார் என்று நம்புவோம்.ஆனாலும் நிகழ்வுகள் தனிப்பூஜ்யமாக (absolute zero) இருக்க வாய்ப்புக்கள் இருக்கின்றனவா என்ன. அப்படியிருக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவோம்.
மேலும் கட்டப்பட்டிருக்கும் அணு உலை யுரேனியத்தை அடிப்படை எரிபொருளாக கொண்டு கட்டப்பட்டுள்ளது, எனவே தோரியம் பாதுகாப்பு அம்சங்கள் இதற்க்கு பொருந்தாது. இன்னும் பத்து வருடங்கள் கழித்து தோரியம் எரிபொருளுக்கு மாறினால் நாங்கள் இன்னுமொரு கலாம் அய்யாவிற்க்கு எங்கே போவது... இதையும் அப்பொழுதைக்கு இப்போதே செய்தால் நலம்.
வணக்கம், என் வலைப்பதிவுக்கு வருகை தந்தமைக்கு நன்றி. உங்கள் மதிப்புமிக்க கருத்துக்களை பதிவு செய்யவும், இது பதிவுகளை மேம்படுத்த உதவும். பாலா
Wednesday, November 9, 2011
கூடங்குளம் சில பார்வைகள்
Sunday, May 29, 2011
சமையல் சமையல்
சமைப்பது எனக்கு எப்போதுமே பிடித்தமான பொழுது போக்கு. ஐயங்கார் புளியோதரையிலிருந்து, கேரள சேரி , கந்நடத்து பாத்துக்கள், ஆந்திரத்து வினைத்தொகை, வடநாட்டார் பாஜி வரை பிராந்திய சுவை கெடாமல் சமைக்கத் தெரியும். இதைத்தவிர புதிதாக சில பாதார்த்தங்களை என் பரிசோதனைச் சாலையில் இரசாயன், பொளதீக மாறுதலுக்கு உட்படுத்தியிருக்கிறேன். இந்த சமைப்பது எப்படி எப்போது ஒட்டிக் கொண்டது என்று இதுவரை விளங்கவில்லை. சமைப்பது பல நேரங்களில் பாண்டிய நாட்டு ஆபத்துதவிகள் போல ஆபத்தில் கைகொடுத்திருக்கிறது.
சமைப்பதுகலையா அறிவியலா அல்லது இயற்பியல், வேதியல், உயிரியல், இலக்கியம், கவிதை இவற்றின் கலவையா. முன்பு B.sc Domestic Science என்று காயிதேமில்லத் போன்ற மகளிர் கல்லூரிகளில் இருந்தது. இப்போது இருக்கிறதா என்று தெரியவில்லை. அதில் துவைப்பது, பெருக்குவது, சமைப்பது போன்றவற்றை அறிவியல்பூர்வமாக எப்படி செய்வது, அப்படி செய்வதால் எப்படி வேலையை சுலபமாக செய்வது என்று கற்றுக் கொடுப்பார்கள் என்று நினைக்கிறேன்.
எது எப்படியோ இந்த காலத்து பெண்கள் வெந்நீர் சமைப்பதை பெருமையாக நினைக்கிறார்கள். ஆண்கள் சமைப்பதற்க்கு வெட்கப்படதேவையே இல்லை என்பது எண்ணம். சமையல்கலை வல்லுனர்கள் எந்தக்காலங்களிலும் ஆண்கள்தான் முன்னிலையில் இருக்கிறார்கள்.
சமைத்துப் பாருங்கள் சமைப்பது Stress Buster.
சமச்சீர் சிரிப்பு திட்டம்
இந்த வருடம் ஆரம்பிப்பதாய் இருந்த சமச்சீர் கல்வியை ஜெயலலிதா நிறுத்தியிருக்கிறார். அள்ளித் தெளித்த அவசரத்துடன் ஆரம்பிப்பதாய் இருந்த சமச்சீர் கல்வியை நிறுத்தியதில் சில நியாயமான காரணங்கள் இருக்கத்தான் செய்கின்றன. எனக்கென்னமோ கருணாநிதி தனது தோல்வி தெரிந்தே இதை அமுல்படுத்த விழைந்திருக்கலாம் என்று தோன்றுகிறது.
கீழே கொடுத்திருப்பது இந்த வருடம் பத்தாம் வகுப்பு மாணவர்கள் படித்திருக்க வேண்டிய – தெய்வாதீனமாகத் தப்பித்த - சமூக அறிவியல் புத்தகத்தில் இருந்து சில வரிகள். இதில் உள்ள சொற்பிழை, பொருட்பிழை, இலக்கணப் பிழைகள், சொற்றொடர் அமைப்புச் சிக்கல்கள் எதற்கும் நான் பொறுப்பில்லை. புத்தகம் முழுவதுமே ஒரு சிறந்த நகைச்சுவை நூலை வாசித்த உணர்வைத் தரும். படித்து சம்ச்சீர்க் கல்வியை சிப்பாய் சிரியுங்கள்
- காமராஜர் தமிழக முதலமைச்சராக ஒன்பது ஆண்டுகள் பணியாற்றினார். பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்தினார். மதிய உணவுத்திட்டம், புதிய பள்ளிகளைத் திறந்து, இலவச கல்வி வழங்குதல், வேளாண்மையை மேம்படுத்துதல், கால்வாய்களை வெட்டுதல், அணைகளைக் கட்டுதல் மற்றும் புதிய தொழிற்சாலைகளை அமைத்தல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டார். தேசிய அரசியலில் முக்கிய பங்கு வகித்தார். இதனால் அரசரை உருவாக்குபவர் எனப் போற்றபட்டார்.
- சாது மகாராஜா மூங்கிர் மாவட்டத்திலுள்ள செல்வச் செழிப்பான குடும்பத்தில் பிறந்தார். இவர் வைணவராக மாறினார். இவருக்குமுன் இவரது குடும்பத்தினர் அனைவரும் சைவ சமயத்தை சார்ந்து சிவனை வழிபட்டனர்.
- சுற்றுச்சூழல் அனைவருக்கும் சொந்தமானது. ஒவ்வொருவரின் தேவையை பூர்த்தி செய்யக்கூடியதே அன்றி ஒவ்வொரு மனிதனின் பேராசைகளை அல்ல. பெருகிவரும் பேராசை நம்மை மிகவும் கடினமான சூழலுக்கு வெவ்வேறு பிரச்சனைகளாக கொண்டு செல்கிறது.
- 1858ஆம் ஆண்டு நவம்பர் 1ம் தேதி இந்தியாவின் கடைசி தலைமை ஆளுநரும் முதலாம் வைசிராயும் ஆன கானிங் பிரபு அலகாபாத்தில் நடைபெற்ற மாபெரும் கூட்டத்தில் விக்டோரியா மகாராணியின் பேரறிக்கையை வெளியிட்டார். அது இந்திய மக்களின் மகாசாசனம் என்று கருதப்பட்டது. இப்பேரறிக்கையின் படி இந்தியாவின் ஆட்சிப் பொறுப்பை இனி இங்கிலாந்து அரசி நேரடியாக மேற்கொள்வார் என அறிவிக்கப்பட்டது. எனவே அவருக்கு பதிலாக அவரது பிரதிநிதி இந்தியாவின் ஆட்சிப் பொறுப்பை மேற்கொள்வார் என அறிவிக்கப்பட்டது.
- கி.பி. 1939 முதல் கி.பி. 1945 வரை நடைபெற்ற இரண்டாம் உலகப்போர், உலகளாவிய ஒரு பெரும் போராக கருதப்படுகிறது.
- ஹிட்லர் ஜெர்மனியின் பெருமையை வெளிப்படுத்தினார். ஜெர்மானியர்கள் உலகின் மிக உயர்ந்த இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பதில் அவர் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தார். நார்டிக் ஜெர்மானிய இனத்தினர் மிக உயர்ந்தவர்கள் என்றும், செமிடிக் யூதர்கள் மிகவும் தாழ்ந்தவர்கள் என்றும் கருதினார். நார்டிக் இனத்தின் தனித்தன்மையைக் காக்கும் பொருட்டு செமிடிக் யூதர்களை வெறுத்து ஒதுக்கினார். அவரது வெறுப்பின் உச்சக்கட்டமே யூதர்களின் படுகொலை ஆகும். ஹிட்லர் செயல்பாடு, வன்முறை தீவிரவாதம் ஆகியவற்றில் நம்பிக்கை கொண்டிருந்தார். மக்கலின் உரிமைகள் பறிக்கப்பட்டன… [மேலும் நீளும் இப்பகுதியின் தலைப்பு ‘ஹிட்லரின் சாதனைகள்’]
- கி.பி. 19-ஆம் நூற்றாண்டின் ஆட்சியாளர்கள் மற்றும் அறிவியல் அறிஞர்கள் எதிர்பார்த்த வண்ணம் உலக அமைதிக்கு ஏற்பட்ட பங்கமே முதல் உலகப்போர் என்று கருதப்படுகிறது.
- பல மில்லியன் வருடங்களுக்கு முன்பு ஒரே ஒரு நிலப்பகுதிதான் இருந்தது. இதைச் சுற்றி பெருங்கடல்கள் சூழ்ந்திருந்தன. இவ்வாறு இருந்த நிலப்பகுதிக்கு ‘பாஞ்சியா’ என்றும் அதைச் சுற்றியுள்ள நீர்ப் பகுதிக்கு ‘பாந்தலாசா’ என்றும் அழைக்கப்பட்டது. இவ்வாறு பரந்த நிலப்பகுதி இரு பகுதிகளாகப் பிரிந்தது.
- இராமகிருஷ்ண இயக்கம், இராமகிருஷ்ண பரமஹம்சரின் பெயரை அடிப்படையாகக் கொண்டு ஏற்படுத்தப்பட்டது. இது ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனம். சுவாமி விவேகானந்தர் என்பவரால் 1897 ஆம் ஆண்டு மே 1ம் நாள் துவங்கப்பட்டது.
- வல்லரசு நாடுகளின் பெருந்தலைவர்கள் தங்களது கொள்கைகளை மறந்து போலியான அமைதி கொள்கையினைப் பின்பற்றினர். அவர்களது கொள்கையினை ஏகாதிபத்திய நாடுகள் ஏற்றுக்கொள்ள மறுத்தன. இது இரண்டாம் உலக போருக்கு வழி வகுத்தது.
- பன்னாட்டு நிறுவனங்கள் என்பது பல நாடுகளில் தங்களது தொழிற் நிறுவனங்களை தொடங்கி நடத்தி வரும் அமைப்புகளாகும்.
- பொருட்கள் என்பது உற்பத்தி செய்யப்பட்ட கார்கள், இரு சக்கர வாகனங்கள், கப்பல்கள், இரயில் எஞ்சின்கள், பேனா, பென்சில், அரிசி, கோதுமை மற்றும் சமையல் எண்ணை போன்ற பொருட்களைக் குறிக்கும்.
- இந்திய மொழிகளின் வளர்ச்சி இந்திய இலக்கியங்கள் உன்னத நிலையை அடைய உதவுகின்றன.
இதைப்போல்தான் மற்ற புத்தகங்களும் தயாரிக்கப்பட்டிருக்கும். வரும் முன் காப்ப்தே நல்லதில்லையா.
நன்றி : writerpara
Saturday, May 14, 2011
சென்னைக்கு ஒரு புதிய காய்கறி மார்க்கெட்.
முன்பு கொத்தவால் சாவடியில் இருந்த காய்கறி மார்க்கெட் கோயம்பேடுக்கு மாற்றாப்பட்டது நாமெல்லாம் அறிந்ததே. தென்சென்னையில் இருக்கும் காய்கறி வியாபாரிகள் கோயம்பேடு வரை சென்று வருவது கடினமாக இருப்பதால் தென்சென்னையிலேயே கோயம்பேடுப் போல் ஒரு வணிக வளாகம் தங்களுக்கு தேவை என்று வியாபாரிகள் சங்கத்தினர் முறையிட்டிருந்தனர். இதைப் பற்றி ஜெயலலிதாவிடம் ஆறு மாதங்களுக்கு முன் மனு கொடுக்கப்பட்டது. தான் முதல்வரானால் முதல் காரியமாக 1000 கோடி செலவில் ஒரு நவீன காய்கறி சந்தையை அவர்களுக்கு வாக்களித்திருந்தார். அதன் பெயரில் நாளை முதல்வராக பதவியேற்றவுடன் ஏற்கனவே கட்டப்பட்ட நவீன காய்கறி மற்றும் பல்போருள் அங்காடியை தென்சென்னை காய்கறி வியாபாரிகளுக்கு கொடுக்கப்படும் என்று PTI செய்திக்குறிப்பொன்று தெரிவிக்கிறது. இந்தக் கட்டிடத்தை ஏற்க்கனவே பிரதமமந்திரி மன்மோகன் சிங் திறந்து வைத்தது குறிப்பிடத்தக்கது.புதிய கட்டிடத்தின் படங்கள் மேலே.
Wednesday, March 2, 2011
சிம்மமாடா இங்கோசி அடிச்சி
இந்த புத்தகத்தை படித்துக் கொண்டிருக்கின்றேன் படித்து முடித்த பின் இதைப் பற்றி எழுதுகிறேன். இந்த புத்தகம் நைஜீரியாவில் நடந்த பைஃபாரா உள்நாட்டு யுத்தம் பற்றியது. மிகவும் அருமையாக சித்தரிக்கப்பட்டிருக்கிறது. இதன் ஆசிரியர் சிம்மமாடா இங்கோசி அடிச்சிப் ப்ற்றி சில...........
சிமமண்டா அடிச்சி புகழ்பெற்ற நைஜீரிய எழுத்தாளர். நைஜீரியாவின் எனுகு(Enugu) எனும் ஊரில் பிறந்த இவர், தனது 19-ஆம் வயதில் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தார். அங்கு மருத்துவ படிப்பையும், ஊடக மற்றும் அரசியலியல் துறையையும் கற்றார். தற்போது யேல் பல்கலைக்கழகத்தில் ஆப்பிரிக்கா சம்பந்தமான மேற்படிப்பை மேற்கொண்டு வருகிறார். அவரது முதல் நாவலான Purple Hibiscus, காமன்வெல்த் எழுத்தாளர் விருதை பெற்றுத் தந்தது. அவரது இரண்டாம் நாவலான “Half of a Yellow Sun” புகழ்பெற்ற புனைவிற்கான ஆரஞ்சு விருதை பெற்றுத் தந்தது. இவரது சிறுகதை தொகுப்பும் மிகப் பிரபலமானது.
எழுத்தாளர் அ.முத்துலிங்கம் தன்னுடைய ‘உலகத்துக்கு எழுதிய கடிதம்’ கட்டுரையில் சிமமண்டாவைக் குறித்து எழுதும் பகுதிகள்:
ரொறொன்ரோவில் சர்வதேச எழுத்தாளர் மாநாடுகள் அடிக்கடி நடக்கும். ஒரு கூட்டத்துக்கு போனபோது சபையிலே எண்பது வீதம் பெண்களாகவே இருந்தார்கள். மேடையைப் பார்த்தால், ஒன்றிரண்டு ஆண் எழுத்தாளர்களைத் தவிர மீதி எல்லாமே பெண்கள். ஓர் அமர்வில் நோபல் பரிசு பெற்ற வோலே சோயிங்கா வாசித்தார். இன்னொன்றில் புலிட்சர் பரிசு பெற்ற எட்வர்ட் ஜோன்ஸ் ஒரு சிறுகதை படித்தார். நைஜீரியாவிலிருந்து வந்திருந்த இளம்பெண் சிமமண்டா Half of a Yellow Sun என்ற அவருடைய நாவலின் முதலாவது அத்தியாயத்தை வாசித்தார். அவருடைய தன்னம்பிக்கையும், வாசிப்பும், கதை சொன்ன பாங்கும் சபையோரை கவர்ந்தது. வாசிப்பு முடிந்ததும் புத்தகத்தை வாங்கிக்கொண்டு பலர் அவருடைய கையெழுத்துக்காக நீண்ட வரிசையில் நின்றார்கள். பெண்களுடைய எண்ணிக்கை சபையிலே எக்கச்சக்கமாக இருந்ததன் காரணம் எனக்கு அப்போது புரிந்தது.
சிமமண்டாவின் எழுத்திலே திடீர் திருப்பமோ, அடுத்து என்ன நடக்கும் என்பதை அறிய விழையும் ஆர்வமோ பெரிதாக இருக்காது. ஆனால் மிக அமைதியான நடையில் எழுதிக்கொண்டே போவார். ஒரு வரியை படித்தால் அடுத்த வரியையும் படிக்கத் தூண்டும் எழுத்து. இவருடைய சிறுகதை ஒன்றை நான் படித்திருந்தேன். அந்தச் சிறுகதையை அவர் இரண்டு வருடங்களாக எழுதியதாகச் சொன்னார். ‘இரண்டு வருடங்களா? ஒரு சிறுகதைக்கா?’ என்றேன். சிறுகதையை எழுதும்போது அதை ஒரு முடிவை நோக்கிச் செலுத்தினேன். பின்னர் படித்துப் பார்த்தபோது பலவந்தமாக ஒரு திசையில் அதை தள்ளிக்கொண்டு போனது தெரிந்தது; இயற்கையாகவே இல்லை. மீண்டும் தொடக்கத்தில் இருந்து புதிதாக எழுதவேண்டி வந்தது என்றார். ஒரு சிறுகதை கேட்டதும் பத்து தாள்களுடன் அறைக்குள் போய் பூட்டிக்கொண்டு மூன்று மணி நேரத்தில் சிறுகதையோடு வெளியே வரும் எழுத்தாளர்களை எனக்குத் தெரியும். நான் வியப்படைந்ததற்கு காரணம் அதுதான்.
அவரிடம் உங்களுக்கு பிடித்த எழுத்தாளர் யார் என்று கேட்டதும் அவர் தந்த பதில் ஆச்சரியமாக இருந்தது. ரொமேஷ் குணசேகெரா என்றார். அவர் பெயரை கேள்விப்பட்டிருந்தேனே ஒழிய அவரைப் படித்ததில்லை. ஓர் இலங்கை எழுத்தாளரைப்பற்றி நைஜீரியப் பெண் கனடாவில் வைத்து என்னிடம் கூறியது அபூர்வமான விடயம்தான். ஒருவருடைய எழுத்து தரமானதா என்பதைக் கண்டுபிடிக்க எழுத்தாளருடைய ஒரு வசனத்தைப் படித்தாலே போதும். வார்த்தைகளை எப்படி தெரிவு செய்கிறார், எப்படி அடுக்குகிறார், வசனங்களை செதுக்கி எப்படி உருவம் கொடுக்கிறார் என்பதைப் பார்ப்பதே முக்கியம் என்றார்.
சிமமண்டாவுக்கு 29 வயதாகிறது. இரண்டு நாவல்களும் சிறுகதைகளும் எழுதியிருக்கிறார். இவருடைய முதலாவது நாவலின் பெயர் Purple Hibiscus. இரண்டாவது நாவல்தான் Half of a Yellow Sun. 1960களில் நைஜீரியாவின் ஒரு பகுதியான Biafra பிரிந்து தனி நாடாக பிரகடனம் செய்தது. அதைத் தொடர்ந்து உள்நாட்டு போர் மூள்கிறது. அந்தக் காலகட்டத்தின் பின்னணியில் கதை சொல்லப்படுகிறது. ஒரு பேராசிரியர், அவருடைய காதலி ஒலானா, அவர்கள் வேலைக்காரன் உக்வு, இவர்களே பிரதான கதை மாந்தர்கள். போர் எப்படி அறிவு ஜீவிகளையும், சாதாரண ஏழை மக்களையும் ஒரே மாதிரி பாதிக்கிறது என்பதையும், அதனால் ஏற்படும் அவலங்களையும், கொடூரங்களையும் பாத்திரங்களின் சம்பாசணை ஊடாக மெள்ள மெள்ள வெளிப்படுத்துகிறது நாவல். கைனானி என்று ஒரு பெண், ஒலானாவின் இரட்டைச் சகோதரி, அவள் பேசும்போது நறுக்காகவும் கெறுக்காவும் இருக்கும். அற்புதமான அவருடைய குணாதியம் நூல்கண்டில் சுழல் சுழலாக நூல் பிரிவதுபோல வெளிப்படும். நாவலின் இடையிலே வந்து இடையிலே மறைந்துவிடும் அந்தப் பாத்திரம் மனதை விட்டு அகலுவதில்லை.
நாவலை விமர்சகர்கள் புகழ்கிறார்கள். பல விருதுகளும், பரிசுகளும் சிமமண்டாவைத் தேடி வருகின்றன. அடுத்த சினுவ ஆச்சிபி என்று இவரை சிலர் சொல்கிறார்கள். எனக்கு என்னவோ இவரை புக்கர் பரிசு பெற்ற நைஜீரிய எழுத்தாளர் பென் ஒக்ரியுடன் ஒப்பிடவே தோன்றுகிறது. இவரால் ஒரு மோசமான வசனம்கூட எழுதமுடியாது. இவருடைய வசனத்துக்கு ஒரேயொரு உதாரணம். ‘அவள் குருவி கொத்துவதுபோல நிறுத்தி நிறுத்தி பேசினாள்.’ என்ன காட்சி வடிவமான, நுட்பமான வசனம். அவருடைய புத்தகத்துக்கு கொடுத்த காசு அந்த ஒரு வசனத்துக்கே சரியாய் போய்விட்டது.
எதற்காக எழுதுகிறீர்கள் என்ற கேள்விக்கு அவருடைய பதில்:
‘நான் எழுதுகிறேன். நான் எழுத வேண்டும். எழுதாமல் இருக்க என்னால் முடியாது. சிலவேளைகளில் எழுத்து என்னிலும் பெரிதாக இருக்கிறது.’
Tuesday, February 15, 2011
நானிலம் போற்றும் நல்லிணக்க நாயகர்
மிலாடி நபி திருநாளையொட்டி, தமிழக முதல்வர் கருணாநிதி, நபிகள் நாயகம்அன்பில் அமைதியைப் போதித்தார். அறத்தை வலியுறுத்தினார். அடுத்தவர்க்குஉதவிகள் புரிவதை உயர்ந்த பண்பாக கருதினார்.
சூரியன் உதிக்கும் ஒவ்வொரு நாளிலும் இருவருக்கு மத்தியில் நீ சமாதானம்செய்து வைப்பது தர்மமாகும்; ஒருவரை அவரது வாகனத்தில் ஏறுவதற்குஅல்லது அவரது பொருளை அதன் மீது ஏற்றுவதற்கு நீ உதவி செய்வதும்தர்மமாகும்.
நல்ல வார்த்தைகளைக் கூறுவது தர்மமாகும்; இடையூறு அளிப்பவைகளைப்பாதையிலிருந்து அகற்றுவது தர்மமாகும் எனக் கூறி அடுத்தவர் நலன் கருதிஆற்றும் அருட்பணிகளை அறம் என வலியுறுத்தினார். என்று வாழ்த்து தெரிவித்திருக்கிறார். தீபாவளி மருந்து சப்பிட்டு விட்டு மருந்துக்குக் கூட வாழ்த்து என்று கூறாத இவர் மதச்சார்பின்மையை நட்டு நிலைநிறுத்தி விட்டார். மேலும் ஜிகாத்துக்கு தனது ஆதரவளித்து முசல்மானாகவே மாறிவிட்டார்.
சில நாட்களுக்கு முன் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில மாநாடு, சென்னை தாம்பரத்தில் நடைபெற்றது. இதில், முதலமைச்சர் கருணாநிதிக்கு, ``நானிலம் போற்றும் நல்லிணக்க நாயகர்'' என்னும் விருது வழங்கப்பட்டது. வெளிநாடு வாழ் தமிழர்களுக்காக, மறுவாழ்வுத்துறை இயக்குநரகத்தை, அகதிகள் மறுவாழ்வு மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்களி ன்நல ஆணையரகம் எனப் பெயர் மாற்றம் செய்திடவும், வெளிநாடு வாழ்தமிழர்கள் நலவாரியத்தை ஏற்படுத்திடவும் அரசு முடிவு செய்துள்ளது என்றுமுதலமைச்சர் கருணாநிதி கூறியிருக்கிறார். அந்த விழாவில் "நமது''மொழியான உருது மொழிக்கு பெருமை சேர்க்க அதை சிறப்பு செய்ய, அதற்குஉரிமைகளைப் பெற்றுத் தர எத்தகைய முயற்சிகளை மேற் கொள்ள வேண்டுமோ அவற்றையெல்லாம் இந்த அரசு செய்துத்தரும் என்றும் கூறியிருக்கிறார்.
கலைஞர் ஐயா இது உங்களுக்கு 60,743 வது விருது, போதும்யா பின்னாடி வரப்பய புள்ளைகளுக்கு கொஞ்சம் விட்டு வைங்கையா.
”நானிலம் போற்றும் நல்லிணக்க நாயகர்''ன்னா குறிஞ்சி, மருதம், நெய்தல்,பாலை இந்த நாலு நிலமாய்யா. பய புள்ளைக இன்னுமொரு நிலத்த உட்டுடிச்சுங்க. கோவிக்காதீங்க அடுத்த மொற சேத்து "ஐ நிலம் போற்றும்நல்லிணக்க விருத" ஜகத் கஸ்பர்ரவுட்டு ஏற்ப்பாடு பண்ணிடுவோம்.அங்கனசற்குண பாண்டியன பத்தி பேச மறந்துடாதீக. அப்புறம் வீரமாமுனிவருக்கு 50 லட்சம் ரூபாய் பரிவுத் தொகையாக அறிவிச்சுடுங்க.
பொறவு நீங்க ரமலானுக்கு தொப்பி போட்டு கஞ்சி குடிச்சது, மீலாடி திருவிழாவுக்கு கேக் வெட்டி கொண்ட்டாடினது பொறவு பக்ரீத்துக்கு ஆடுவெட்டினது இதெல்லாம் சொல்ல மறந்துட்டீங்கன்னு நினைக்கிறேன். எங்கனபேசுனாலும் சூதனமா சொல்ல வேண்டியத சொல்ல மறந்துடாதீங்கையாஅதான் ஞாபகபடுத்தினேன்.
நமது'' மொழியான உருது மொழிக்கு பெருமை சேர்க்க ஒரு வாரியத்தஅமைங்க , அதுக்கு உங்களையே தலைவரா போட்டுக்கங்க, கனியம்மாவுக்கும்எதுனா பதவி கொடுங்க. அப்புறம் அது செம்மொழியாக்கி ஒரு மாநாடு நடத்திஅதை ஒரு வழி பண்ணிடுங்க.
உருது மொழிய எப்படி செம்மொழின்னு அறிவிக்கறதுன்னு நீங்க முழிக்கறீங்கஎனக்கு தெரியுது. ஒரு யோசன சொல்லுதேன் கேட்டுக்குங்க. உருது மொழி2000 வருஷம் பழைமையானது, திருவள்ளுவரே உருது தான் பேசிகிட்டுஇருந்தாரு. அதனாலதான் ”துப்பார்க்கு துப்பாய துப்பாக்கி..” அப்படின்னு குறளஎளுதினாரு. துப்பாக்கின்றது உருது மொழி, மொத்த திருக்குறளும்இதப்போலதான் உருதுல எளுதினாரு, ஆனா வந்தேறிகள் சைபர் கணவாய்வழியா வந்து எல்லாத்தையும் தழிழ்ல மொழிபெயர்த்துட்டாங்க , அதனாலதமிழர்களின் தந்தை மொழி உருது, தாயவுட தந்தைதானே வயசானவரு,அதனால உருது செம்செம்மொழி அப்படின்னு உடுங்க. நீங்க சொன்னாநாங்கள்ளாம் கேக்காமலா போகபோறோம்.
அப்புறம் கீழ கொடுத்திருகிற மாதரி தீர்மானம் போட்டு நிறைவேத்திடுங்க.
1) பள்ளிகள்ல்ல தமிழ் 2 வது மொழியா இருக்கலாமாய்யா தூக்கிப்புட்டு உருத எல்லாரும் படிக்கணும்ன்னு சொல்லிபுடுங்க.
2) இனிமே வெளிநாடுவாழ் தமிழர்கள் நாங்க இருக்கிற நாடு எங்களுதுன்னு போராடி உரிமை கொண்டாடறோம். உங்க பேச்ச கேட்டு போராடினா எப்படியும் அகதிகளாயிடுவோம் . "அகதிகள் மறுவாழ்வு மற்றும் வெளிநாடு வாழ்தமிழர்களின் நல ஆணையரகம்'' மூலம் அகதியா நாங்க வந்தா ராமேஸ்வரத்துல தங்க ஏற்ப்பாடு செஞ்சி கொடுத்துடுங்க.
3) சென்னை பல்கலைகழகத்த அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழகன்ம்ன்னு பேர் மாத்திடுங்க. 150 ஆண்டா பீசாண்ட சும்மாதானே நிக்குது.
4) மிஸ்ரா கமிஷன் பத்து சதவிகிதம் கொடுக்கலாம்ன்னு தப்பா பரிந்துரைசெய்திட்டாரு. 25% இருக்கறவங்களுக்கு , உளொதுக்கீடு, வெளிஒதுக்கீடு, நடுஒதுக்கீடு, ஓரஒதுக்கீடு, ஓர வஞ்சனை ஒதுக்கீடு எல்லாம் போட்டு ஒரு 30%வது ஒதுக்கீடு வாங்கி கொடுத்துடுங்க.
5) 1992ல பாபர் மசூதி இடிப்பு நடந்தது, 1999ல நீங்க பி.ஜெ.பி கூட கூட்டணிவெச்சுகிட்டீங்க. நீங்க இங்கன பிளேட்ட அப்படியே திருப்பிப்போட்டு பி.ஜெ.பி. `இங்கே எங்களுக்கு இனி வேலையில்லை'' ந்னு வந்ததுக்கு காரணம் பாபர்மசூதி பிரச்சனை இல்லீங்கோ. பேரம் படியலீங்க அதனால
அய்யன் கருணாநிதி ஐயா உங்கள் (உருது) மொழிப்பற்றும், (போலி) மதச்சார்பின்மையும் மயிர் கூச்சறிய வைக்கிறது. எப்போதும் போல் வாழ்த்த வார்த்தையில்லை வணங்குகிறேன்.