Sunday, September 20, 2009

சிறை எண்- 1


மூலம்- சிம்மமாண்டா நகோஸி அடிச்சி, தமிழில்- பாலாஜி

முதல் முறை எங்கள் வீட்டில் களவு போனபோது , எங்கள் பக்கத்துக்கு வீட்டு பையன் ஒசிடா சமையலறை ஜன்னல் வழியாக உள்ளே குதித்து தொலைகாட்சி பெட்டி, வி.சி.ஆர். மற்றும் அப்பா அமெரிக்காவிலிருந்து வாங்கி வந்த பர்புள் ரெயின் மற்றும் த்ரில்லர் வீடியோ சுருள்களை களவாண்டான்.

இரண்டாவது முறை எங்கள் வீட்டை களவாண்டது என் தம்பி நனமாபியா. அவன் வீடு களவு போனது போல் ஒரு சூழலை உருவாக்கி, அம்மாவின் நகைகளை திருடிவிட்டான். அது ஒரு ஞாயிற்று கிழமை. எனது பெற்றோர்கள் எங்கள் சொந்த ஊர் மபைசுக்கு பயணப்பட்டுருந்தர்கள். நானும் நனமபியவும் தனியாக தேவாலயம் சென்றோம். அவன் என் அம்மாவினுடைய பச்சை நிற பெஜோட் 504 காரை ஓட்டிவந்தான். நாங்கள் இருவரும் எப்போதும் போல் ஒன்றாக சர்ச்சில் உட்கார்ந்திருந்தோம், அனால் வழக்கம் போல் மற்றவர்களை பார்த்து கிண்டல் செய்து சிரிக்கவில்லை, ஏனென்றால் நனமாபியா பத்து நிமிடம் கழித்து எழுந்து போய் விட்டன்.

அவன் திரும்பி வரும் பொழுது பதாரியார் "இந்த பிரார்த்தனை கூட்டம் முடிந்தது அமைதியுடன் கலையுங்கள்" என்று கூறிக்கொண்டிருந்தர். அவன் புகைபிடித்து விட்டு வந்திருக்கலாம் அல்லது பெண்ணுடன் ஊர் சுற்றியிருக்கலாம் என்று நினைத்து எரிச்சலடைந்தேன். அவன் போவதற்க்கு முன் என்னிடம் ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாம். நாங்கள் வீட்டிற்க்கு திரும்பி வரும் வரை மௌனமாக வந்தோம். அவன் காரை நிறுத்தி வீட்டை திறந்தான் அதுவரை வெளியில் இருந்த பூக்களை பரித்துகொண்டிருந்தேன். நான் உள்ளே சென்று பார்த்தபோது அவன் கூடத்தின் நடுவே நின்று கொண்டிருந்தான்.

" நாம் களவடப்பட்டோம்" என்றான் ஆங்கிலத்தில். எனக்கு அங்கு என்ன நடக்கிறது என்று புரிய சில தருணங்கள் தேவை பட்டது. வீட்டில் உள்ள சாமான்கள் சிதறியிருந்ததில், மேஜை டிராயர்கள் திறந்திருந்ததில் ஒரு செயற்கை தன்மை இருந்தது, எனக்கு என் சகோதரனைப் பற்றி நன்றாக தெரியும்.

பிறகு, எனது பெற்றோர்கள் வீடிற்கு வந்தார்கள். நான் எனது மாடியறையில் தனியாக உட்கார்ந்து இருந்த போது வயிறு பிசைந்தது. நனமாபியாதான் இதை செய்திருக்கிறான், எனக்கு தெரியும். என் அப்பாவிற்கும் தெரியும்.

அப்பா ஜன்னல் கதவு உள்ளிருந்துதான் திறந்திருக்க முடியும் என்பதை அவனிடம் சுட்டிகாட்டினார். நனமாபியா திருட்டை சரியாக செய்ய ஒன்றும் புத்திசாலியில்லை, மேலும் அவன் பிரார்த்தனை கூட்டம் முடிவதற்குள் வந்து சேரவேண்டும் என்ற பதட்டட்டத்தில் இருந்திருக்கிறான். திருடர்களுக்கு கூடத்தின் இடது மூலையில் உள்ள பெட்டியில்தான் எனது அம்மாவின் நகைகள் உள்ளது என்பது எப்படி சரியாக தெரியும்.

நனமாபியா எனது தந்தையை பார்த்த பார்வையில் ஒரு தோற்றுப்போன தன்மை தெரிந்தது. " நான் உங்களுக்கு மிகுந்த வலியை தந்திருக்கிறேன் என்று எனக்கு தெரியும், ஆனால் நான் உங்கள் நம்பிக்கையை மீறி நடக்கமாட்டேன்." என்று ஆங்கிலத்தில் பேசினான், தேவையில்லாமல் வலி, நம்பிக்கை போன்ற வார்த்தைகளை உபயோகித்தான். அவன் தன்னை தற்காத்துக் கொள்ளும்போதெல்லாம் இம்மாதிரி வார்த்தைகளைதான் உபயோகிப்பான். பிறகு அவன் வீட்டின் பின்புறமாக வெளியே சென்றுவிட்டான். அன்றிரவு அவன் வீடு திரும்பவில்லை. அடுத்த நாள் இரவும், அதற்க்கு அடுத்த நாள் இரவும் வரவில்லை.

இரண்டு வாரம் கழித்து வீட்டற்கு வந்தான் நோஞ்சானாக பீர் நாற்றத்துடன். எனுகுவில் ஒரு ஹவுசா வியாபாரியிடம் நகைகளை அடகு வைத்து எல்லா பணமும் போய் விட்டது என்று அழுதுகொண்டே சொன்னான்

"என்னுடைய நகைகளுக்கு எவ்வளவு தந்தார்கள்" என்று அம்மா கேட்டாள்.
அவன் சொன்னவுடன் அம்மா தலையில் அடித்துக் கொண்டு அழுதாள். அவன் நகைகளுக்கு கூடுதல் பணம் வாங்கியிருக்கலாம் என்று. எனக்கு அம்மாவை அடிக்க வேண்டும் போல் இருந்தது. அப்பா நனமாபியா நகைகளை எப்படி விற்றான் என்ன செலவு செய்தான் என்று எழுதிதருமாறு கேட்டார். எனக்கு நனமாபியா உண்மையை எழுதித்தருவான் என்று தோன்றவில்லை. அப்பாவிற்கும் இது தெரியும். அனால் அவருக்கு இந்த மாதிரி தகவல் அறிக்கைகள் பிடிக்கும், ஒரு பேரசிரியர் அவருக்கு எல்லாம் எழுத்து பூர்வமாக வேண்டும். மேலும் நனமாபியாவிற்கு வயது பதினேழு, முகத்தில் சீராக தாடி வைத்திருந்தான். அவன் பல்கலை கழகம் நுழைய இருந்த நேரம். அவனை வேறென்னதான் என் அப்பாவால் செய்திருக்க முடியும் அடித்திருக்கவா முடியும்?.
நனமாபியா எழுதி முடித்தவுடன் அதை தனது படிப்பறையில் உள்ள இரும்பு அலமாரிக்குள் எங்கள் பள்ளிக்கூட காகிதங்களுடன் பத்திர படுத்திக்கொண்டார்.
" இதை போல் ஒரு வலியை அம்மாவிற்க்கு கொடுத்திருக்க வேண்டாம்" என்று மெல்லிய குரலில் சொன்னார்.
ஆனால் நனமாபியா உண்மையாகவே அவளை காயப்படுத்த நினைத்திருந்திருக்க மாட்டான் . வீட்டில் ஏதேனும் மதிப்பான பொருள் உள்ளதென்றால் அது அம்மாவின் நகைகள்தான் . வாழ்நாள் முழுதும் கஷ்ட்டப்பட்டு சேர்த்தது. மற்ற பேராசிரியர்களின் மகன்களும் திருடுகிறார்கள் , அதனால் நனமாபியாவும் திருடியிருக்கலாம். எங்கள் நஸுக்கா பல்கலை கழக வளாகத்தில் இது திருடும் காலம். பையன்கள் Sesame Street பார்த்தும், Enid Blyton படித்தும் வளர்கிறார்கள். அக்கம்பக்கத்து வீடுகளில் ஜன்னல் கதவுடைத்து திருடுகிறார்கள். நஸுக்கா வளாகம் ஒன்றும் அவ்வளவு பெரியதல்ல, வீடுகளெல்லாம் அடுத்தடுத்து நெருக்கமாக இருந்தன. திருடர்கள் யார் என்று எல்லோருக்கும் தெரியும். ஆனாலும் பேராசிரியர்கள் சந்தித்து கொள்ளும் போது வெளி யாட்கள் வளாகத்திற்குள் வந்து திருடுவதாக பிரஸ்தாபிப்பார்கள்.
இங்கு திருடும் பையன்கள் மிக பிரசித்தம். சாயங்கலங்களில் பெற்றோர்களின் வண்டியை எடுத்துக்கொண்டு ஸ்டைலாக ஒட்டி வருவார்கள். ஒசிடா, பக்கத்து வீட்டு பையன், நனமாபியா சம்பவத்திற்கு ஒரு வாரத்திற்கு முன் எங்கள் வீட்டில் திருடியவன், கொஞ்சம் அழகாகவும் இருப்பன், பூனை போல் நளினமாக இருக்கும் அவன் நடை, எப்போதும் இஸ்த்திரி போட்ட சட்டயையே அணிவான். அவன் எங்கள் வீட்டை கடக்கும் போதெல்லாம் என்னை நோக்கி வருவதாகவும் என்னை கவர்ந்து செல்வதாகவும் கற்பனை செய்துகொள்வேன். அவன் என்னை சட்டையே செய்ததில்லை. அவன் திருடன் என்று எனது பெற்றோருக்கும் தெரியும் ஆனாலும் அவன் அப்பா பேராசிரியர் எபோபேவிடம் சென்று புகார் கூறியதில்லை.
ஒசிடா நனமாபியாவை விட இரண்டு வயது மூத்தவன், பெரும்பாலான திருட்டு பயல்கள் நனமாபியாவைவிட மூத்தவர்கள். அதனால்தான் நனமாபியா மற்றவர் வீட்டில் திருடாமல் சொந்த வீட்டில் திருடினான்.
நனமாபியா எனது அம்மாவை போல் இருந்தான், தேன் மஞ்சளாக, பெரிய அழகிய கண்களுடன், செதுக்கிய வாயுடன் லட்சணமாக இருந்தான். அம்மா கடை தெருவுக்கு போகும் போதெல்லாம், கடைக்காரர்கள் " ஏம்மா உன்னுடைய நிறத்தை பையனுக்கு கொடுத்துட்டு, பொண்ண கருப்பா பெத்துட்ட? இந்த அழக வெச்சுகிட்டு அவன் என்ன செய்ய போறான் " என்று கேட்கும் போது அம்மாவிற்கு பூரிப்பு தங்காது. நனமாபியாவின் அழகுக்கு அவள் தான் காரணம் என்று நெக்குருகி போவாள். நனமாபியா பதினொரு வயதில் பள்ளிகூட ஜன்னல் கண்ணாடியை உடைத்த போது அப்பாவிற்கு தெரியாமல் மாற்றி கொடுத்தாள். பள்ளி நூலகத்தில் அவன் புத்தகம் தொலைத்தபோது எங்கள் வீட்டு வேலைக்காரி பையன் திருடிவிட்டதாக பொய் சொன்னாள். அவன் பெரியவனானதும் அப்பாவின் கார் சாவியை சோப்பில் அழுத்தி அச்செடுத்ததை அப்பா பார்த்ததும் அவன் சும்மா விளையாட்டிற்கு செய்தான் என்று சப்பை கட்டினாள். அவன் அப்பாவின் மாணவர்களுக்கு கேள்வி தாள்களை அப்பாவின் அலமாரியிலிருந்து எடுத்து விற்று அது அப்பாவிற்கு தெரிய வந்தபோது, அவனுக்கு பதினாறு வயது ஆகிவிட்டது கை செலவிற்கு கூடுதல் பணம் கொடுக்க வேண்டும்மென கூச்சல் போட்டாள்.

நனமாபியா அம்மாவின் நகைகளை திருடியதற்காக வருந்தினானா என்று தெரியவில்லை, அவனது சிரித்த முகம் எதையும் வெளிகட்டவில்லை. நானும் அதை பற்றி ஒன்றும் கேட்க்கவில்லை. அம்மா வாங்கிய ஒரு காதணிக்கும் வளையல்களுக்கும் நானும் அவனும் தான் போய் தவணை கட்டி வருவோம். அவனுடைய களவனித்தனத்தை நினைவில் வைத்திருக்க கூட தேவையிருந்திருக்காது அவன் கல்லூரியில் முன்றாம் ஆண்டு படிக்கும்போது பல்கலை கழக காவல் நிலையத்தில் கைதகியிருக்காவிட்டால்.

இன குழுக்கள் அமைதியாக இருந்த எங்கள் நஸுக்கா வளாகத்திற்குள் நுழைந்தது. . பல்கலை கழகங்களிலெல்லாம் கொட்டை எழுத்தில் "இன குழுக்கள் வேண்டம் " (Say No to CULTS). என்று பெரிய பெரிய சுவரொட்டி தென்பட்ட காலம். இந்த குழுக்களில் கருப்பு கோடரி, கடற் கொளையர்கள் ஆகிய குழுக்கள் பிரசித்திபெற்றவை . சிறு சிறு நட்பு வட்டங்களாக இருந்தது இப்போது பரிணாம வளர்ச்சி அடைந்து இனக்குழுக்களாக மாறிவிட்டது. துப்பாக்கிகளும், கோடலிகளும் மற்ற குழுவை சேர்ந்தவனை துன்புறுத்துவதும் சகஜமாகிவிட்டது.. கத்தி குத்தும் துப்பாக்கி சூடும் தினசரி வாடிக்கையாகிவிட்டது. கல்லுரி முடிந்ததும் பெண்கள் விடுதிகளை விட்டு வெளியே வருவதில்லை. கல்லுரி ஆசிரியர்கள் பூச்சி சத்ததிற்குகூட அதிர்ந்தார்கள். மக்கள் பயத்தில் அழ்ந்தர்கள். அதனால் போலீஸை வளாகத்திற்குள் அழைத்தார்கள். போலிஸ்காரர்கள் அவர்களுடைய துருபிடித்த துப்பாக்கியுடன் ரோந்து சுற்றினார்கள். நனமாபியா ஒரு நாள் கல்லுரி முடிந்து சிரித்துக்கொண்டே வந்தான். அவனை பொருத்த வரை போலீஸ்காரர்கள் கையாலகதவர்கள். இன குழுக்களிடையே நவீன ரக துப்பாக்கி இருப்பது எல்லோருக்கும் தெரியும்.

என் பெற்றோர்கள் நனமாபியாவின் சிரிப்பை கவலையுடன் பார்த்துக் கொண்டிருந்தனர். அவர்களுக்கு அவன் எதவதொரு இனக்குழவுடன் சம்மந்த பட்டிருக்கிறானா என்ற சந்தேகம் இருந்தது. இனக்குழு பயல்கள் பிரபலமனவர்கள். நனமாபியா மிகவும் பிரபலமானவன். அவனுடைய நண்பர்கள் அவனை அவனது பட்டப்பெயரன “கெட்டவன்” என்றே அழைத்தார்கள். கல்லுரி அழகிகள் அவனிடம் வழிந்தார்கள். எல்லா விருந்து கேளிக்கைகளிலும் அவன் கலந்து கொண்டான். எல்லா இனக்குழு பையன்களிடமும் நட்புடன் பழகியது போல் தான் தெரிந்தது. நான் அவனிடம் ஏதாவது குழுவுடன் சம்மந்தப் பட்டிருக்கிறானா என்று கேட்ட போது அவன் ஏதோ கேட்க்கக் கூடாததை கேட்டு விட்டது போல் என்னை முறத்துபார்த்து “கண்டிப்பாக இல்லை” என்றான், நான் அவனை நம்பினேன். என் அப்பவும் அவனை நம்பினார். அவனைப்பற்றி எங்களுடய நம்பிக்கை பொய்த்தது, அவன் ஒரு இனக்குழுவுடன் சம்மந்தப்பட்டிருக்கிறான் என்று குற்றம்சாட்டி கைது செய்யும் வரை. அவனை முதன் முறையக காவல் நிலையத்தில் சிறையில் சந்தித்த போது நான் கேட்ட அந்த கேள்விக்கு “கண்டிப்பாக இல்லை” என்றான்.

அது இப்படி தான் நடந்தது ,ஒரு வெக்கையான திங்கள் கிழமை மதியம், நான்கு இனக்குழு உறுப்பினர்கள் எங்கள் கல்லூரி வாசலில் ஒரு பேராசிரியரை துப்பாக்கியால் மிரட்டி, அவருடைய சிகப்பு மெர்சிடிஸ் காரை எடுத்துக்கொண்டு பொறியியல் பகுதிக்கு சென்று, அங்கு உலாத்திகொண்டிருந்த மூன்று மாணவர்களை சுட்டார்கள். சம்பவம் நடந்த இடத்திற்க்கு அருகில் உள்ள வகுப்பறையில் இருந்தேன், வெடிசத்தம் கேட்டதும் முதலில் வெளியே ஓடியது எஙகள் விரிவுரையாளார். மாணவர்களும் ஆசிரியர்களும் மூட்டையிலிருந்து சிதறிய கோலிகுண்டுகள் போல் ஓடினர். கீழே வராண்டாவில் மூன்று உயிரற்ற சடலங்கள் கிடந்தன. கல்லூரி முதல்வர் மாலை கல்லுரிக்கு விடுமுறை அறிவித்தார், 9 மணிக்கு மேல் வெளியே வரக்கூடாதென்று ஊரடங்கு சட்டம் போடப்பட்டது. எனக்கு இது பைத்திய காரத்தனமாய் பட்டது, பட்டப்பகலில் நடந்த சம்பவம் இது, நனமாபியாவிற்க்கும் இது பைத்தியகாரத்தனமாய் இருந்திருக்க வேண்டும் ஏனென்றால் அவன் அன்றிரவு வீட்டிற்க்கு வரவில்லை. அவன் நண்பன் வீட்டில் தங்கியிருப்பான் என்று நினைத்துக் கொண்டேன். அவன் எல்லா நாட்களிலும் வீட்டிற்க்கு வருவதில்லை.

மறுநாள் காலை கல்லூரியின் காவலாளி நனமாபியாவையும் மற்றும் நான்கு பேரையும் இரவு உணவு விடுதியியிலிருந்து போலிஸ்காரர்கள் கைது செய்ததாய் சொன்னார். என் அம்மா ”அப்படி சொல்லாதே” என்று கத்தினாள். அப்பா அமைதியாக நன்றி கூறிவிட்டு எங்களை அழைத்துக்கொண்டு காவல் நிலையம் சென்றார். அங்கு பேனா மூடியை மென்றுக் கொண்டு ஒரு கான்ஸ்டபிள் “ நீங்க நேத்து ராத்திரி கைது செஞ்ச அந்த பசங்களையா சொல்றீங்க, கேசு ரொம்ப ஸ்ட்ராங்கு நேத்திக்கே, பசங்கள எனுகு அனுப்பியாச்சு,”

நாங்கள் காரில் வரும்போது ஒருவித புது பயம் எங்களை ஆக்ரமித்தது. நஸீக்காவில் என்றால் நிலைமையை சமாளிக்கலாம். அப்பாவிற்க்கு சூப்பரண்டெண்ட்யை தெரியும். ஆனால் எனுகு ஒரு விநோதமான இடம். ஒரு மநிலத்தின் தலைநகரம். அங்கு போலீஸ்காரர்கள் வைத்ததுதான் சட்டம். அவர்கள் குற்றவாளிகளை கொல்ல கூட தயங்க மாட்டார்கள்.

எனுகு காவல் நிலையம் சுற்றி கருங்கல் சுவர் கட்டி உள்ளே நிறைய கட்டிடங்கள் இருந்தன். நுழைவயிலின் ஓரத்தில் நிறைய துருபிடித்த கார்கள் தூசிபடிந்திருந்தன. அதற்க்கு அருகில் இருந்த கட்டிடத்தில் காவல் துறை ஆணையர் என்ற பலகை இருந்தது. அப்பா வண்டியை நிறுத்திவிட்டு உள்ளே சென்றார். அங்கிருந்த இரண்டு கான்ஸ்டபிளுக்கு லஞ்சமாக அம்மா கொஞ்சம் பணமும் தக்காளி சாதமும் கறியும் உள்ள பாக்கட் தந்தாள். அவர்கள் நனமாபியாவை எங்களுடன் வெளியே மரத்திற்க்கு கீழே போடப்பட்டிருந்த பெஞ்சில் பார்க்க அனுமதித்தார்கள். யாரும் அவனை ஏன் ஊரடங்கு சட்டம் அமலில் இருந்தபோது அந்த இரவு வெளியே தங்கினான் என்று கேட்க்கவில்லை. போலீஸ் செய்தது அராஜகம் என்று சொல்லவில்லை. அவன் பேசுவதற்க்காக காத்துக்கொண்டிருந்தோம். அவன் அம்மா கொடுத்த சாப்பாட்டை சாப்பிட்டபடியே பேச ஆரம்பித்தான்.

” இந்த சிறையை(ஜெயிலை) போல நைஜீரியாவும் இருந்தால் ஒரு பிரச்சனையும் வராது. இங்கே எல்லாம் ரொம்ப ஒழுங்கு. எங்கள் அறையில் ஒரு தலைவர், பெயர் ஜெனரல் அபாச்சா, அந்த அறைக்கு இருக்க வேண்டுமென்றால் அவனுக்கு காசு கொடுக்க வேண்டும், இல்லையென்றால் பிரச்சனைதான்”
“உன்கிட்ட பணம் இருந்ததா” அம்மா கேட்டாள்
நனமாபியா சிரித்தான், அவன் நெற்றியில் பருவை போல் கொசு கடி அவன் முகத்தை இன்னும் அழகாக ஆக்கியது. அவனை போலிஸ்காரர்கள் உணவகத்தில் கைது செய்த போது அவர்கள் பணத்தை எடுத்துக் கொள்வார்கள் என்று தனக்கு தெரியும் என்றும். அதனால் பணத்தை சுருட்டி ஆசன வாயில் வைத்துக் கொண்டதாகவும் ஈபோவில் சொன்னான்.
“ஜெனரல் அபாச்சாவுக்கு நான் பணத்தை மறைத்து வைத்த சாமர்த்தியம் பிடித்திருந்தது. புது சிறை வாசிகள் அரை மணி நேரம் தோப்புகரணம் போடச் சொனான் என்னை 10 நிமிடத்தில் விட்டுவிட்டான்”

அம்மா கண்களை துடைத்துக் கொண்டாள், அப்பா ஒன்றும் பேசவில்லை அவனையே பார்த்துக்கொண்டிருந்தார். நான் அவன் சில 100 நயரா நோட்டுக்களை சிகரெட்டை போல் மடித்து சொருகிகொள்வதாக நினைத்துப் பார்த்தேன், என் உடம்பு சிலிர்த்தது.

நஸுக்காவிற்க்கு காரில் திரும்பும் போது அப்பா பேசினார் “அவன் போன முறை திருடின போதே நான் அவனை ஜெயிலுக்கு அனுப்பியிருக்க வேண்டும்.” என்றார்.
“ ஏன் “ என்றேன் ” அவன் கொஞ்சம் ஆடிப்போயிருக்கான், உனக்கு தெரியலயா” எனக்கு தெரியவில்லை. அன்று எப்பொதும் போல் உள்ளதாகவே எனக்கு பட்டது.

----ooOOoo----


நனமாபியாவின் முதல் அதிர்ச்சி கருப்பு கோடாரி ஒருவன் அழுதப்போதுதான். அவன் உயரமாக வாட்டசாட்டமாக இருப்பான், நடந்த கொலைகளில் அவனும் ஈடுபட்டிருக்கலாம் என்று ஒரு பேச்சுண்டு. அவனை போலீஸ் அதிகாரி அடித்த அடியில் தேம்பி தேம்பி அழுததாக மறுநாள் அவனை பார்க்க போன போது ஒருவித விரக்தியோடு நனமாபியா சொன்னான். ஓரிரு நாட்களுக்கு பிறகு அவனது இரண்டாவது அதிர்ச்சி சிறை எண் ஒன்று. இவன் அறைக்கு பக்கத்து அறை. இரண்டு போலிஸ்காரர்க்ள் ஊதிப்போன உடலை அந்த அறையிலிருந்து எடுத்துக் கொண்டு போகும் போது இவர்களுக்கும் காட்டிவிட்டு சென்றிருக்கிறார்கள்.

அவன் அறையின் தலைவனே சிறை எண் -1 என்றால் பயம். நனமாபியாவிற்க்கு சிறைஎண்-1 கனவில் வந்தால் கூட தூக்கி வாரி போடுகிறது. அவனது அறையில் கூட்டம் அதிகம். சில நாட்கள் இடபற்றாக்குறையால் நின்று கொண்டே தூங்கியதாக சொல்லுவான். குளிக்க ஒரு பெரிய பெயிண்ட் வாளியில் மஞ்சள் நிற தண்ணீருக்கு ஏகப்பட்ட விலை கொடுத்து வாங்க வெண்டும் என்றும் அவன் இருந்த அறையில் எறும்பும், எலியும் அதிகமென்பான். நனமாபியா முகத்திலும் கைகால்களிலும் கொசுகடியாலும், பூச்சிக்கடியாலும் சீழ்கட்டிகளும் கொப்புளங்களும் வந்தன. அவன் சிறையில் படும் வேதனையை அனுபவித்து சொல்ல ஆரம்பித்தான். நான் அவன் இப்படி பேசுவதை நிறுத்த வேண்டும் என்று நினைத்தேன். அவனுக்கு நாங்கள் கொண்டுவரும் சாப்பாட்டை சாப்பிட அனுமதித்தது எவ்வளவு அதிர்ஷ்டம் என்று அவனுக்கு தெரியவில்லை மேலும் அவன் எவ்வளவு முட்டாள்தனமாய் அந்த இரவு வெளியே இருந்திருக்கிறான் அதனால் அவனது விடுதலை எவ்வளவு நிலையற்றதாய் இருக்கிறது இப்போது.
---ooOOoo---

“கஷ்டம்” என்றார் நஸூக்கா சூப்பரண்டண்ட். அதுவும் எனுகு போலீஸ் கமிஷனரிடமிருந்து, இப்போதைய சூழ்நிலையில் விடுதலை பெறுவது மிகவும் கடினம் என்றார். கமிஷனர் இனப்போரளிகளின் கைது பற்றி டி.வியில் பரபரப்பு பேட்டி கொடுத்தது பற்றி சொன்னார். இனக்குழு பிரச்சனை மிகவும் தீவிரமாக கண்காணிப்பதாகவும்,. அபுஜாவிலுள்ள அரசியல் பெரும் புள்ளிகள் இதை கவனித்துக்கொண்டிருப்பதாகவும் எல்லோரும் ஏதாவாது செய்வது போல் காட்டிக்கொள்வதாகவும் கூறினார்.

இரண்டாவது வாரம் இரண்டாவது நாள், நனமாபியாவை பார்க்க போக வேண்டாம் என்று சொன்னேன். இப்படி எத்தனை நாள் போவது, பெட்ரோல் செலவுவேறு ஏகத்துக்கு போய் கொண்டிருந்தது. மேலும் எனுகு போய் வர 6 மணி நேரமாகிறது. ஒரு நாள் போகவில்லையென்றால் அவனுக்கு ஒன்றும் ஆகிவிடாது.

என் தந்தை என்னை ஆச்சரியத்துடன் பார்த்தார்” நீ என்ன சொல்ல வர” என்று கேட்டார். அம்மா என்னை முறைத்தாள் ”நீ அவனை பார்க்க வரவில்லை என்றால் ஒரு குடியும் முழுகிவிடாது” என்று கூறிவிட்டு வாசலுக்கு சென்றாள். நான் வாசலில் கிடந்த இரண்டு கற்க்களை காரின் மேல் எறிந்தேன். கல் பட்டு கார் கண்ணாடி விரிசல் விழுந்தது. அம்மா என்னை அடிக்க வந்தாள், நான் என் அறைக்கு சென்று தாழிட்டு கொண்டேன். அம்மா அப்பா கோபமாக கத்தினார்கள் சிறிது நேரம் கழித்து சத்தம் அடங்கியாது. கார் கிளம்பும் சத்தம் கேட்க்கவில்லை. அன்று யாரும் நனமாபியாவை பார்க்க போகவில்லை. என்னுடைய இந்த சின்ன வெற்றி என்னை ஆச்சரியமூட்டியது.

மறுநாள் நாங்கள் அவனை சென்று பார்த்தோம். கார் கண்ணாடி விரிசல் பற்றி அவனிடம் ஒன்றும் சொல்லவில்லை. அங்கிருந்த்த ஒரு கருப்பான போலீஸ்காரன் நாங்கள் ஏன் நேற்று வரவில்லை என விசாரித்தான். அம்மாவின் சாப்பாட்டை இழந்த வருத்தம் அவனுக்கு. நான் நனமாபியாவும் கேட்ப்பான் என்று நினைத்திருந்தேன் ஆனால் அவன் சோகமாக உட்கார்ந்திருந்தான். அவனை இதுபோல் பார்த்ததில்லை. அன்று அவன் சரியாக சாப்பிடவில்லை. வாசலில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த எரிந்து போன கார்களையே பார்த்துக்கொண்டிருந்தான்.

“என்ன ஆச்சு” என்று அம்மா கேட்டாள், இத்ற்க்காகவே காத்துக் கொண்டிருந்தவனைப்போல் ஆரம்பித்தான். அவன் குரல் உடைந்திருந்தது.
“ஒரு கிழவரை நேற்று என் அறையில் அடைத்திருக்கிறார்கள். அவருக்கு வயது 75க்கு மேல் இருக்கு”ம் என்றான். ” அவர் தலைமயிரெல்லாம் நரைத்திருக்கிறது, தோலில் சுருக்கம் விழுந்திருக்கிறது. அவர் ஒரு பழங்காலத்து ஆசாமி நேர்மையான் அரசு ஊழியர். அவரது மகனை கொள்ளை(Armed Roberry) மற்றும் கொலை குற்றத்திற்க்காக தேடுவதாகவும், அவன் கிடைக்கவில்லையாதலால் இவரை சிறையில் அடைத்திருக்கிறார்கள்” என்று கூறினான்.
“அந்த கிழவர் ஒரு குற்றமும் அறியாதவர் “ என்றான் நனமாபியா
“நீயும் கூடத்தான் “ என்றாள் அம்மா
நனமாபியா தலையாட்டினான் அவளுக்கு தான் சொல்வது புரியவில்லையென்று, பிறகு வந்த நாட்கள் மிகவும் வருத்ததிலிருந்தான். இப்போதெல்லாம் மிகவும் குறைவாகவே பேசுகிறான், அப்படியே பேசினாலும் அந்த கிழவரை பற்றிதான்.
“அவரிடம் ஒரு கோபோ கூட இல்லை, குளிக்க ஒரு வாளி தண்ணீர் கூட வாங்க முடியாத நிலையிலிருக்கிறார்” என்றும். மற்றவர்களின் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாகி எப்படி சிறுத்திருக்கிறார் என்றும் விவரித்தான்.
“ அவரோட பையனை பற்றி அவருக்கு தெரியுமா” அம்மா கேட்டாள்
“ நாலு மாசமாச்சாம் அவர் பையனை பார்த்து” என்றான் நனமாபியா. பையனுக்கு பதில் அவனது தந்தையை அடைத்து வைப்பது சரியல்ல என்பது போல் ஏதோ சொன்னார் அப்பா
“கண்டிப்பாக இது தப்பு” என்றாள் அம்மா போலீஸ்காரர்கள் குற்றவாளிகளை பிடிக்க முடியவில்லையென்றால் அவரது உறவிரர்களை சிறையில் அடைத்து கொடுமைபடுத்துவதாக அங்காலயித்தாள்.
“ அந்த மனிதருக்கு உடம்பு சரியில்லை, தூங்கும் போது கூட கை கால்கள் நடுங்குகின்றன” என்றான் நனமாபியா.
என் பெற்றோர்கள் அமைதியாக இருந்தார்கள். நனமாபியா சாப்பாட்டு தூக்கை மூடி அப்பாவிடம் கொடுத்தான்.. “இந்த சாபாட்டை அந்த கிழவருக்கு கொடுக்க ஆசைபடுகிறேன், ஆனால் ஜெனரல் அபாச்சா எல்லாவற்றயும் தின்றுவிடுவான்”.

அப்பா அருகிலிருந்த போலீஸ்காரனிடம் சென்றார். அந்த கிழவரை சில நிமிடங்கள் பார்க்க அனுமதிக்க முடியுமா என்று கேட்டார். அம்மாவிடம் கைநீட்டி காசு வாங்கும் போலீஸ்காரன். ஒரு முறை கூட நன்றி சொன்னதில்லை. அப்பாவை வேண்டா வெறுப்பாக நிமிர்ந்து பார்த்தான் “ இது என்ன சத்திரம்னு நினைச்சுக்கிட்டிருக்கீங்களா, உங்க பையனை பார்க்க அனுமதிச்சதுக்கே என் வேலை போய்டும், இங்க நிக்காதீங்க போங்க” என்றான் காட்டமாக. அப்பா திரும்பவும் வந்து உட்கார்ந்தார். நனமாபியா சோகமாக தலை குனிந்துக் கொண்டான்.
அடுத்த நாள் நாங்கள் கொண்டு சென்ற சாப்பாட்டை அவன் தொடவில்லை.
“அந்த கிழவர் மீது தண்ணீர்ப்பட்டு ஒரு வாரத்திற்க்கு மேல் ஆகிறது. நேற்று அவர் போலீஸ்காரர்களிடம் ஒரு வாளி தண்ணீர் கேட்டார். அதற்க்கு அவரை நிர்வாணமாக்கி துன்புறுத்தினார்கள்” அவன் கண்களில் கண்ணீர் எட்டிப் பார்த்தது. எனக்கு அவன் மேல் விவரிக்க முடியாத பரிவு வந்தது.

இரண்டு நாட்களுக்கு பிறகு, இன்னுனொரு முறை கலவரம் பல்கலைகழக வளாகத்தில் நடந்தது. கல்லூரி இசை பிரிவில் ஒரு பையனை கோடாலியால் வெட்டியிருக்கிறார்கள்.
“இதுவும் ந்ல்லதுக்குதான்” என்றாள் அம்மா, அவர்கள் நஸுக்கா போலீஸ் சூப்பரண்டண்டை பார்க்க கிளம்பிக்கொண்டிருக்கும் போது. அன்று முழுவதும் நாங்கள் எனுகு போக முடியவில்லை. என் பெற்றோர்கள் அன்று முழுவதும் சூப்பிரண்டண்டுடன் செலவழித்தனர்.. முடிவில் நல்ல செய்தியுடன் வந்தனர். நனமாபியாவை உடனே கைது செய்ய உள்ளனர் என்று. கலவரத்தில் பிடிபட்டவன் நனமாபியா தங்கள் குழுவை சார்ந்தவன் இல்லை என்றுவாக்குமூலம் கொடுத்திருக்கிறான்.

மறுநாள் நாங்கள் எப்போதும் கிளம்புவதை விட கொஞ்சம் முன்னதாகவே கிளம்பினோம். அம்மா அன்று சாப்பாடு எடுத்துக் கொள்ளவில்லை. வெய்யில் சுள்ளென்று அடித்தது.

காவல் நிலையத்தினுள் நாங்கள் நுழையும் போது போலிஸ்காரர்கள் யாரையோ அடித்துக் கொண்டிருந்தார்கள். அவனை எனக்கு தெரியும், அவன் பெயர் அபோனி. ஒவ்வொரு அடிக்கும் அவன் அலறிக்கொண்டிருந்தான். அவன் எங்கள் கல்லூரி தாதா. கருப்பு கோடாலியின் முக்கிய உறுப்பினன். நாங்கள் அவனை கடந்து செல்லும்போது அவன் எங்களை பார்த்து விடக்கூடாதென்று கடவுளை பிராத்தித்துக்கொண்டேன்.

நாங்கள் காவல் நிலையத்திற்க்குள் சென்றோம் அங்கிருந்த போலீஸ்காரர் லஞ்சம் கொடுத்தால் வாங்கிக்கொண்டு ”கடவுள் ஆசிர்வதிப்பார்” என்று வாழ்த்துபவர். எங்களை பார்த்தவுடன் வேறெங்கோ பார்த்தார். எனக்கு இதில் எங்கோ தவறு நேர்ந்திருப்பதாகப் பட்டது. என் தந்தை சூப்பரண்டண்டிடமிருந்து வாங்கி வந்த விடுதலை உத்தரவை அந்த போலீஸ்காரரிடம் தந்தார்.
”விடுதலை உத்தரவைப் பற்றி ஏற்கனவே எங்களுக்கு தெரியும் . உங்க பையனை விடுதலை செய்வதில் சில சிக்கல்கள் இருக்கின்றன” என்று சொன்னார்.
“ என் பையனுக்கு என்ன ஆச்சு...” என்று அந்த போலிஸ்கரரின் சட்டையை பிடிக்கப் போனாள் அம்மா. அப்பா அவளை விலக்கி விட்டு “ என் பையன் எங்கே, அவனுக்கு என்ன ஆச்சு “என்று கொஞ்சம் குரலை உயர்த்திக் கேட்டார் அப்பா தீர்க்கமாக.
“ அவனை கூட்டிகிட்டு போய்டாங்க” அதற்க்குள் மேலதிகாரி உள்ளிருந்து வந்தார்.
எல்லோரும் அவர் என்ன சொல்லப்போகிறார் என்று காத்துக்கொண்டிருந்தோம். நான் அவனை போலிஸ்காரர்கள் சுட்டு கொன்றிருப்பார்கள் என்று கூட நினைத்தேன்.
“அவனை வேறு இடத்திற்க்கு மாற்றி விட்டோம் “ என்றார் அவர்.
“வேறு இடத்திற்க்கு ஏன் மாற்றினீர்கள்” என்று கேட்டார் அப்பா
“நேற்று அவன் ரொம்ப முரண்டு பிடித்தான் அதனால அவனை சிறை ஒண்ணுல அடைத்தோம், பிறகு அவனை இடமாற்றம் செய்து விட்டோம்”
“ முரண்டு பிடிச்சானா”
“என்னை இப்பவே அவன் கிட்ட கூட்டிக்கிட்டு போ..” என்று அம்மா அழ ஆரம்பித்தாள்
“ஜீப்புல பெட்ரோல் இல்லை வாங்க உங்க காரிலேயே போயிடலாம்..”
அப்பா காரை ஓட்டினார் நாங்கள் வழி நெடுகிலும் ஏதும் பேசவில்லை அந்த போலீஸ்காரர் வழிசொல்வதை தவிர. அப்பா எப்போதையும் விட வேகமாக வண்டியை ஓட்டினார். எனக்கு பயத்தில் இதயம் அடித்துக்கொண்டது. 15நிமிடம் பயணத்திற்க்கு பிறகு ஒரு பாழடைந்த கட்டிடத்திற்க்குள் சென்றோம். அங்கு ஒரே குப்பையும் கூளமுமாக இருந்தது. காவல் நிலையத்திற்க்கான எந்த ஒரு அடையாளமும் தெரியவில்லை. நாங்கள் வெளியே நின்றுகொண்டோம். போலிஸ்காரர் உள்ளே சென்று நனமாபியாவை அழைத்து வந்தார். அம்மா ஓடிசென்று அவனை கட்டிக்கொண்டாள். அவன் கை,கால்களில் சிராய்புக்கள் தெரிந்தன, முகத்தில் கண்ணுக்கு கீழ் ரத்தக் கட்டி கருத்திருந்தது.உதட்டோரத்தில் காஞ்சிப்போன ரத்தம்.
”எதுக்குப்பா உன்ன அடிச்சாங்க” “ஏன் என்புள்ளையை அடிச்சி கொடுமை படுத்தியிருக்கீங்க” அம்மா போலீஸிடம் சீறினாள்.
“நீங்க அவனை சரியா வளக்கல, அவன் செஞ்சதுக்கு அவனை உயிரோட பாக்கறதே பெரிய விஷயம் ,கூட்டிக்கிட்டு போங்க” என்று சொல்லிவிட்டு உள்ளே சென்றுவிட்டார்
”சரி வாங்க போகலாம்” என்று அப்பா முன்னே நடந்தார். நாங்கள் நஸூக்கா வரும் வரை ஏதும் பேசவில்லை. வீட்டிற்க்கு வந்தவுடந்தான் நனமாபியா பேசினான்.
“நேற்று அந்த கிழவரிடம் குளிக்க தண்ணீர் வேண்டுமா என்று போலிஸ்காரர்கள் கேட்டார்கள், அதற்க்கு அவர் வேண்டும் என்றார். அவ்ர் நிர்வாணமாக கூடத்தில் நடந்தால் தருவதாக சொன்னார்கள். சிறைவாசிகளும் போலிஸ்காரர்களுடன் சேர்ந்துக் கொண்டு சிரித்து கேலி பேசினார்கள்” நானமாபியா நிறுத்தினான். பிறகு சுவர்களை வெறித்து பார்த்துக்கொண்டு ஆரம்பித்தான்.
”நான் அந்த கிழவர் அப்பாவி ஒன்றுமறியாதவர், அவரது மகன் செய்த குற்றத்திற்க்காக அவரை இப்படி கொடுமை படுத்துவது எந்த விதத்தில் நியாயம் என்று கத்தினேன். நான் வாயைமூடாவிட்டால் என்னை சிறை ஒன்றில் அடைத்துவிடுவோம் என்றார்கள். ஆனால் நான் பயப்படவில்லை. நான் என் தரப்பு நியாயத்தை கூறிக்கொண்டிருந்தேன். என்னை அடித்து இழுத்துக் கொண்டு சிறை ஒன்றில் அடைத்து விட்டார்கள்”

நனமாபியா அங்கு நிறுத்தினான். நாங்கள் மேற்க் கொண்டு ஏதும் கேட்க்கவில்லை. நான் அவன் போலீஸ்காரர்களிடம் ”முதுகெலும்பற்ற கோழைகளே” “வடிகட்டின முட்டாள்களே” என்று கத்துவதாக எண்ணிப்பார்த்தேன். ஒரு கல்லூரி மாணவன் கத்தியதை பார்த்து போலிஸ்காரர்கள் எப்படி ஆச்சரியத்தில் உறைந்திருப்பார்கள். சிறைவாசிகள் எப்படி ஆச்சரியப்பட்டிருப்பார்கள், அந்த கிழவரும் தன்மானத்துடன் தன் துணிகளை கழட்ட முடியாது என்று கூறியிருப்பார். நானமாபியா சிறை எண் ஒன்றில் என்ன நடந்தது, அவனை கூட்டிக்கொண்டு சென்ற இடத்தில் என்ன நடந்தது என்று சொல்லவில்லை. போலிஸ்காரர்கள் கூட்டிச்சென்ற பாழடைந்த கட்டிடத்திலிருந்து மக்கள் காணாமல் போய்விடுவார்கள் என்று தெரிந்தும். அவன் இந்த சம்பவத்தை ஒரு பெரிய கதையாக சொல்லியிருக்கலாம்.
ஆனால் என் அழகிய தம்பி அப்படி செய்யவில்லை.


Thursday, September 10, 2009

ஆப்பிரிக்காவின் உலக யுத்தம்






அயன் படத்தில் சூர்யா காங்கோவில் வைரம் கடத்தும் காட்சி நினைவிருக்கிறதா. அந்த வைரங்கள் எத்தனை மக்களின் உயிர்களை வாங்கியிருக்கின்றன என்பது உங்களுக்கு தெரியுமா

ஒன்பது நாடுகள் சேர்ந்து ஒரு உள் நாட்டு யுத்தத்தை நடத்தியிருக்கிறது. சுமார் 57 லட்சம் மக்கள் கொல்ல பட்டிருக்கிறார்கள், முடமானவர்கள்,அனாதையான குழந்தைகள், இடம் பெயர்ந்த அகதிகள், வன்புணர்ச்சிக்கு ஆளான பெண்கள் ஏராளம். உலகில் தீவிரவாதம் அல்லது போர் நீடிப்பது சில நாடுகளுக்கு நல்லது. சமாதானத்தை தீவிரமாக விரும்பும் ஜப்பான்தான் துப்பாக்கி உற்பத்தியில் முதல் இடம். இருண்ட கண்டத்திலிருந்து சில நிகழ்வுகள் ஊடகங்கள் பார்வையிலிருந்து இருட்டடிக்க பட்டிருக்கிறது. அந்த நாடு ஜனநாயக குடியரசு காங்கோ( Democratic Republic of Congo).

காங்கோ ஆப்ரிக்காவின் முன்றாவது பெரிய நாடு. காங்கோ முன்பு ஸையர்(Zaire) என்ற நமகரணத்துடன் இருந்தது. ஆறு கோடி மக்கள் தொகை. மத்திய ஆப்பிரிக்காவில் அங்கோலா, குடியரசு காங்கோ( இது வேற காங்கோ), மத்திய ஆப்ரிக்கா குடியரசு, சூடான், உகண்டா, ருவாண்டா, ப்ருண்டி, தான்சானியா, சாம்பியா இவ்வளவு நாடுகள் சூழ ஒரு பக்கம் அட்லாண்டிக் பெருங்கடலுடன் வளமான நாடக இருந்தது. கனிம வளத்தில் மிகுந்த நாடு.

செப்பு, மாங்கநீஸ், தங்கம், வெள்ளி, யுரேநியம், நிலகரி, தகர தாது, ஈயம், கோபால்ட் போன்ற கனிமங்கள் கட்டங் என்னும் இடத்திலும், வைரம் கசின் என்னும் இடத்திலும் கிடைக்கிறது. இதை தவிர கச்சா எண்ணையும் காங்கோ ஆறும் அட்லண்டிகிம் கலக்கும் இடத்தில ஈரலமாக கிடைக்கிறது. காங்கோவின் 75% நிலம் காடு. தேக்கும் எபோனி மரமும் கொட்டிகிடக்கிறது.
கடந்த பதினொரு ஆண்டுகளில், நிலத்திற்க்காக அங்குள்ள கனிம வளத்திற்காக ஒரு மாபெரும் யுத்தம் நடந்திருக்கிறது. இந்த போர்களுக்கு சூத்திரதாரிகளுள் ஒருவர் ருவண்டாவின் அதிபர் பால் ககாமே. ககாமேவின் டூட்சி இனத்தை சேர்ந்தவர். அவரின் டூட்சி படையும் காங்கோவில் உள்ள சிறு சிறு போராளி குழுக்களுடன் இணைந்து ஒரு மாபெரும் யுத்தத்தை நடத்தி முடித்திருக்கிறார். இதற்க்கு காகமே கூறும் காரணம் ருவண்டவிற்கு ஹூட்டு போராளி குழுக்களால் ஆபத்து, ஹூட்டு இன தீவிரவாதிகள் 1994-இல் ருவண்டாவில் இன படுகொலைகளை நடத்தினார்கள் என்று. இன்று வரை அமெரிக்காவும் மற்ற ஐரோப்பிய நாடுகளும் ருவாண்டவிர்க்கு சாதகமாகத்தான் நடந்து வருகிறார்கள், காரணம் காங்கோவில் உள்ள கனிமவளம். இன்று வரை ஹூட்டு தீவிரவதிகளால் ருவாண்டவிர்க்கு அச்சுறுத்தல் என்பது விவாதத்திற்கு உட்பட்டதே.

காங்கோவில் ருவாண்டாவின் தலையீடு 1996 இல் ஆரம்பமானது. 1994 இல் ககாமாவின் ருவண்டா விடுதலை முன்னணி உகண்டாவிலிருந்து முன்னேரி டூட்சிக்கும் ஹூடுவிர்க்கும் நடந்த போரை. இந்த உள்நாட்டு போரில் ஒன்பது லட்சம் மக்கள் மடிந்தனர். ஹூட்டு இன மக்கள் இருபது லட்சம் பேர் ஐக்கிய நாட்டு கிழக்கு காங்கோ அகதிகள் முகாமிற்கு ஓடினார்கள். அங்கேயும் ருவண்டவிலிருந்து குண்டுகள் வீசி ஹூட்டுக்களை ஓட ஓட விரட்டியது ககாகமெவின் படை.

இப்போது காங்கோவின் சரித்திரத்தை சற்று புரட்டி பார்ப்போம். பிறகு ருவண்டாவின் கதையை தொடர்வோம்.

காங்கோ 1960 ஜூன் வரை 75 ஆண்டு காலம் பெல்ஜிய காலனி ஆதிகத்தின்கீழ் இருந்தது. பெல்ஜியம் அம்போவென விட்டு போன பிறகு நடந்த தேர்தலில் பாட்டரிக் லும்மும்பா பிரதமராகவும் ஜோசப் கஸாவோபூ தலைமை பொறுப்பும் ஏற்றார்கள். இரண்டு மாதத்தில் கஸாவோபூ தலைமையிலான படை பெல்ஜிய கூலி படையுடன் இணைந்து பிரதமர் லும்மும்பாவை போட்டு தள்ளியது. இதற்க்கு அமெரிக்காவும் உடந்தை.

“More evidence has emerged that when United States president Dwight Eisenhower met his national security advisers to talk about the situation in Congo two months after the June 1961 independence he said Lumumba, the country’s first prime minister, should be eliminated."— Derek Ingram, 40 years on—Lumumba still haunts the West, Gemini News Service, 1 September 2000”

சில மாதங்களுக்கு பிறகு அமெரிக்க நாடுகளின் ஆசியுடன் மொபுட்டு செஸ் சோகோ. கலவரங்களுக்கு பிறகு காங்கோவின் அதிபரனான். ஆட்சி பொறுப்பை ஏற்றவுடன் காங்கோவின் பெயரை ஸயர்(zaire) என்று மாற்றினான். (தன்னுடைய ஜோசப் டிசயர் மொபுடோ என்னும் பெயரையும் மொபுடோ சேசே சோகோ என்று மற்றிக்க் கொண்டான்.) மொபுடோவின் ஆட்ச்சியில் பொருளாதாரம் அதலபதளம் போனது. லஞ்சம் தலை விரித்து ஆடியது. நாட்டின் இயற்க்கை வளங்கள் சூறையாடப்பட்டன. கனிமங்களை வந்தவிலைக்கு சல்லிசாக விற்றான். இவையனைத்தும் அமெரிக்காவின் துணை கொண்டு. காரணம் காங்கோ ஆப்ரிக்காவில் ஸோவியத் யூனியனை எதிர் கொள்ள ஒரு சிறந்த களம். மேலும் ஏற்கனவே சொன்னது போல் காங்கோவின் இயற்க்கை வளம்.

“U.S. policy toward Mobutu was rationalized on the grounds of fighting “communism” and Soviet influence in Africa, but the U.S. was clearly more concerned with securing its own interests in the region than helping foster a stable, secure, and peaceful future for the people of Central Africa. Lying at the center of the continent, Zaire could provide the U.S. with access to important resources, transportation routes, and political favors. Over the years, U.S. rhetoric changed slightly, placing greater emphasis on democratic reform of the regime and increased attention to human rights, but in reality policy continued to focus on promoting narrowly defined U.S. economic and strategic interests.… The U.S. prolonged the rule of Zairian dictator Mobutu Sese Soko by providing more than $300 million in weapons and $100 million in military training. Mobutu used his U.S.-supplied arsenal to repress his own people and plunder his nation’s economy for three decades, until his brutal regime was overthrown by Laurent Kabila’s forces in 1997. When Kabila took power, the Clinton administration quickly offered military support by developing a plan for new training operations with the armed forces."William D. Hartung and Bridget Moix, Deadly Legacy: U.S. Arms to Africa and the Congo War, Arms Trade Resource Center, World Policy Institute, January 2000”

மே 1997 இல் லாரட் கபிலாவின் கொரில்லா படை ருவாண்டா, உகண்டா, அங்கோலா மற்றும் எரிட்ரியா உதவியுடன் மொபுடுவின் ஆட்சிக்கு சமாதி கட்டியது. மொபுட்டு காங்கோவிற்கு விட்டு சென்றது $12 பில்லியன் கடன்.

லாரட் கபிலா ஆட்சிக்கு வந்தவுடன் ஸயர் என்னும் பெயர் மீண்டும் காங்கோ(DRC) என்று மாறியது. லாரட் கபிலாவின் சர்வதிகார ஆட்சியும் நாட்டின் சீர்கேட்டிற்கு முயற்சி ஏதும் எடுக்க வில்லை. இதை காரணம் கட்டி 1998 ஆகஸ்ட் காங்கோபுரட்சி படை ருவாண்டா, உகண்டா மற்றும் புருண்டி அரசு படையுடன் இணைந்து காங்கோவின் பெரும் பகுதியை ஆக்ரமித்தது. இந்த ஆக்ரமிப்பை லாரட் கபிலாவின் அரசுப்படை, அங்கோலா, நமிபியா மற்றும் ஜிம்பாப்வே படையுடன் சேர்ந்து எதிர்த்தது. இந்த யுத்தம் தான் ஆப்பிரிக்காவின் உலக யுத்தம்.

1997 இல் லுசாகாவில் ஆறு நாடுகள் கையப்பமிட்ட ஒப்பந்தம் யுத்தத்தை நிறுத்த முடியவில்லை. 2001 இல் லாரட் கபிலா கொல்லப்பட்டு ஆட்சி மகன் ஜோசப் கபிலாவின் கைகளுக்கு வந்தது. ஜோசப் ஏப்ரல் 2002 இல் உள்நாட்டு பூரி முடிவுக்கு கொண்டுவர உகண்டா மற்றும் ருவாண்டாவுடன் ஒரு ஒப்பந்தம் போடப்பட்டது. அதற்குள் இருபத்தி ஐந்து லட்சம் மக்கள் மடிந்திருந்தனர். மீண்டும் ருவண்டா கண்கோளிச பூரளிகளுக்கு உதவி செய்தது இதில் சாவு எண்ணிக்கை 38 லட்சமாக உயர்ந்தது.

1970 க்கு பின் ஜூலை 2006 இல் நடந்த பொது தேர்தலில் ஜோசப் கபிலா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இப்போது ருவண்டாவில் விட்ட கதைக்கு வருவோம். ஹூட்டு இன மக்கள் அகதிகளா காங்கோவில் கிழக்கு பகுதியில் கிவு பிராந்தியத்தில் உள்ள ஐக்கிய நடுகல் முகம்கல்லுகு சென்றார்களா. இந்த கிவு மாநிலத்தில்தான் ஏராளமான கனிமங்கள் கிடைக்கின்றது. இங்கு ருவண்டாவின் டூட்சி இனத்தவர்கள் கனிம சுரங்கங்களுக்கு அதிபர்களாகவும் நிலசுவாந்தார்களாகவும் இருந்தார்கள்.

மொபுட்டு (காங்கோவை ஸயர் என்று பெயர் மாியவர் ) ஹூட்டு இன போராளிகளுக்கு அடைக்கலம் தருவதாக கூறி, ககாமே படைலாரட் கபிலவுடன் இணைந்து ஆட்சியை கை பற்றியது. இதற்க்கு அமெரிக்காவும் உதவி செய்தது. இதற்க்கு பின் கபிலா ககாகமெவின் படையை வெளியேற சொன்னபின் வீறு கொண்டு எழுந்ததுதான் ஆப்பிரிக்காவின் உலக யுத்தம். இந்த கதையை கங்காவின் கதையில் சொல்லியயிு.

இந்த யுத்தத்தில் மிகவும் பயனடைந்தது ருவாண்டா மூலமாக முன்னேறிய நாடுகள்.

The United States military has been covertly involved in the wars in the Democratic Republic of Congo, a US parliamentary subcommittee has been told. Intelligence specialist Wayne Madsen, appearing before the US House subcommittee on International Operations and Human Rights, also said American companies, including one linked to former President George Bush Snr, the father of the current US President, are stoking the Congo conflict for monetary gains.
— John Kakande, US Army Operated Secretly in Congo, allAfrica.com, June 17,
கங்கோவின் ஏராளமாண கனிம வளத்தை ககாகமெவின் படை சூறையாடியது. ஆப்ரிக்கா உலக போர் முடிவுக்கு வரும் வேளையில் ககாகமெவின் அதரவு லுரெட் நகுண்டு என்னும் ஒரு டூட்சி தீவிரவாத படையை காங்கோவின் ஹூட்சி வசிக்கும் (அகதிகளாக) பகுதியில் இறக்கி படுபாதக செயல்களை கட்டவிழ்த்துவிட்டது ககாமேவின் ஆட்சி.

காங்கோவில் இயற்க்கை வளம் யுத்தத்தை கொழுந்து விட்டு எரிய வைத்தது. colton என்னும் தாது மின்னணு இயந்திரங்கள் தயாரிப்பதற்கு ஒரு மூலப்பொருள். அது காங்கோவின் கிழக்கு பகுதியில் ஏராளமாக கிடைக்கும். 1999-2000 இல் இந்த கோல்டன் க்கு ஏகப்பட்ட கிராக்கி ஏற்ப்பட்டது. டூட்சி படை( காகமே) அங்கிருந்த விவசாயிகளின் நிலங்களை ஆக்ரமித்து அங்கிருந்த விவசாயிகளை அடிமையாகி அவர்கள் நிலங்களிலிருந்தே அவர்களை கொண்டு கோல்டன் யை உலக சந்தையில் விற்றது ஆதாரத்துடன் பதிவாகியிருக்கிறது.
Given the substantial increase in the price of coltan between late 1999 and late 2000, a period during which the world supply was decreasing while the demand was increasing, a kilo of coltan of average grade was estimated at $200. According to the estimates of professionals, the Rwandan army through Rwanda Metals was exporting at least 100 tons per month. The Panel estimates that the Rwandan army could have made $20 million per month, simply by selling the coltan that, on average, intermediaries buy from the small dealers at about $10 per kg. According to experts and dealers, at the highest estimates of all related costs (purchase and transport of the minerals), RPA must have made at least $250 million over a period of 18 months. This is substantial enough to finance the war. Here lies the vicious circle of the war. Coltan has permitted the Rwandan army to sustain its presence in the Democratic Republic of the Congo. The army has provided protection and security to the individuals and companies extracting the mineral. These have made money which is shared with the army, which in turn continues to provide the enabling environment to continue the exploitation.— Report of the Panel of Experts on the Illegal Exploitation of Natural Resources and Other Forms of Wealth of the Democratic Republic of the Congo, United Nations Security Council, April 12, 2001.

இதை தவிர தங்கம், தகரம், வைரம் என ஏகப்பட்டதை ககாமே படை கங்கோவிலிருந்து சூறையாடினர். சரி இதனால் ருவண்டவிற்கு ஏதேனும் லாபமா என்றால் அதுதான் இல்லை. அங்குள்ள மக்களின் வாழ்க்கைதரம் அப்படியேதான் இருக்கிறது. இவர்கள் கையில் துப்பாக்கி கொடுத்து தங்களுக்கு வேண்டியதை மேலை நாடுகள் எடுத்து கொள்கின்றன.
The United States military has been covertly involved in the wars in the Democratic Republic of Congo, a US parliamentary subcommittee has been told. Intelligence specialist Wayne Madsen, appearing before the US House subcommittee on International Operations and Human Rights, also said American companies, including one linked to former President George Bush Snr, the father of the current US President, are stoking the Congo conflict for monetary gains.— John Kakande, US Army Operated Secretly in Congo, allAfrica.com, June 17, 2001

காங்கோவில் நடந்த ஆப்ரிக்கா உலக யுத்தம் ஒரு சிக்கலான உள்நாட்டு போர். இதில் ஏழு நாடுகள் நேரடியாக பங்கு கொண்டன.
· தண்ணீருக்காக, கனிமங்களுக்காக, பல்வேறு அரசியல் நிகழ்வுகளுக்காக, பல்வேறு சர்வதேச நிறுவனங்களின் வளர்ச்சிக்காக 1998 முதல் நடந்த இந்த யுத்தத்தில்
o 54 லட்சம் மக்கள் கொல்லப்படிருக்கிறார்கள்.
o இரண்டாம் உலக போருக்கு பிறகு நடந்த மிக கோரமான யுத்தம்.( இது எத்தனைபேருக்கு தெரியும்)
o பெரும்பாலான மக்கள்( 80%) யுத்த தாக்குதல்களை விட மலேரியா, நிமோனியா, போஷாக்கின்மை போன்ற நோயகள் தாக்கி இறந்தனர். சாதரண சூழலில் நிச்சயம் சாவு எண்ணிக்கை குறைந்திருக்கும்.
o இறந்ததில் பாதிக்கு பாதி குழந்தைகள்.
o இன்னமும் 15 லட்சம் பேர் அகதிகளாய் இருக்கிறார்கள்.
இந்த அதிர்ச்சி எண்ணிக்கை ஊடகங்களுக்கும், உலக நாடுகளுக்கும் காங்கோ பக்கம் திரும்ப போதுமானது. ஆனால் மேலை நாடுகள் காங்கோவின் வளங்களால் கண்மூடி, வை பொத்தி, காதடைத்து நிற்கின்றன.

இப்போதும் காங்கோவில்அமைதி ஒரு கண்ணாடி போலிருக்கிறது எந்நேரமும் சுக்கல் சுக்கலாக உடையலாம்.