Thursday, October 15, 2009

காலனியம் நடத்திய மூன்றாம் உலகப்போர்

நீங்கள் பின்வரும் மின்னணு சாதனங்களில் ஏதேனும் ஒன்றையாவது உபயோகிக்கிறீர்களா? செல்ஃபோன், டிவிடி ப்ளேயர், வீடியோ கேம் சாதனம், கம்ப்யூட்டர். ‘ஆம்’ என்றால் உங்களுக்கும் காங்கோவில் பல லட்சம் மக்கள் கொல்லப்பட்ட ஒரு உள்நாட்டுக் கலவரத்துக்கும் அணு அளவேனும் தொடர்பிருக்கும் வாய்ப்பு உண்டு. என்ன திகைத்துவிட்டீர்கள்? இந்த எல்லா மின்னணு சாதனங்களிலுமே கோல்டான் (Columbite-Tantalite =coltan) என்றொரு முக்கியமான கனிமப்பொருள் உபயோகிக்கப்படுகிறது. உலகின் பல பகுதிகளில் இந்த கோல்டான் கனிமப்பொருள் கிடைத்தாலும், காங்கோவிலிருந்து இது உள்நாட்டு ருவாண்டா தீவிரவாதிகளால் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்தக் கனிமப்பொருட்களை சுரங்கத்திலிருந்து சேகரிப்பதற்காகப் பல போர்க்கைதிகளையும், வயது முதிர்ந்தவர்களையும், பெண்களையும், ஏன் குழந்தைகளையும் கூடத் துப்பாக்கிமுனையில் மிரட்டி வேலை வாங்கிக்கொண்டிருக்கிறது இந்தத் தீவிரவாதக் கும்பல். இவற்றில் உகாண்டா, புருண்டி ஆகிய அண்டை நாட்டு கொரில்லாக் குழுக்களும் அடக்கம். மேலும் படிக்க இங்கே சொடுக்குங்கள்