Sunday, May 29, 2011

சமையல் சமையல்

சமைப்பது எனக்கு எப்போதுமே பிடித்தமான பொழுது போக்கு. ஐயங்கார் புளியோதரையிலிருந்து, கேரள சேரி , கந்நடத்து பாத்துக்கள், ஆந்திரத்து வினைத்தொகை, வடநாட்டார் பாஜி வரை பிராந்திய சுவை கெடாமல் சமைக்கத் தெரியும். இதைத்தவிர புதிதாக சில பாதார்த்தங்களை என் பரிசோதனைச் சாலையில் இரசாயன், பொளதீக மாறுதலுக்கு உட்படுத்தியிருக்கிறேன். இந்த சமைப்பது எப்படி எப்போது ஒட்டிக் கொண்டது என்று இதுவரை விளங்கவில்லை. சமைப்பது பல நேரங்களில் பாண்டிய நாட்டு ஆபத்துதவிகள் போல ஆபத்தில் கைகொடுத்திருக்கிறது.

சமைப்பதுகலையா அறிவியலா அல்லது இயற்பியல், வேதியல், உயிரியல், இலக்கியம், கவிதை இவற்றின் கலவையா. முன்பு B.sc Domestic Science என்று காயிதேமில்லத் போன்ற மகளிர் கல்லூரிகளில் இருந்தது. இப்போது இருக்கிறதா என்று தெரியவில்லை. அதில் துவைப்பது, பெருக்குவது, சமைப்பது போன்றவற்றை அறிவியல்பூர்வமாக எப்படி செய்வது, அப்படி செய்வதால் எப்படி வேலையை சுலபமாக செய்வது என்று கற்றுக் கொடுப்பார்கள் என்று நினைக்கிறேன்.

எது எப்படியோ இந்த காலத்து பெண்கள் வெந்நீர் சமைப்பதை பெருமையாக நினைக்கிறார்கள். ஆண்கள் சமைப்பதற்க்கு வெட்கப்படதேவையே இல்லை என்பது எண்ணம். சமையல்கலை வல்லுனர்கள் எந்தக்காலங்களிலும் ஆண்கள்தான் முன்னிலையில் இருக்கிறார்கள்.

சமைத்துப் பாருங்கள் சமைப்பது Stress Buster.

சமச்சீர் சிரிப்பு திட்டம்


இந்த வருடம் ஆரம்பிப்பதாய் இருந்த சமச்சீர் கல்வியை ஜெயலலிதா நிறுத்தியிருக்கிறார். அள்ளித் தெளித்த அவசரத்துடன் ஆரம்பிப்பதாய் இருந்த சமச்சீர் கல்வியை நிறுத்தியதில் சில நியாயமான காரணங்கள் இருக்கத்தான் செய்கின்றன. எனக்கென்னமோ கருணாநிதி தனது தோல்வி தெரிந்தே இதை அமுல்படுத்த விழைந்திருக்கலாம் என்று தோன்றுகிறது.

கீழே கொடுத்திருப்பது இந்த வருடம் பத்தாம் வகுப்பு மாணவர்கள் படித்திருக்க வேண்டிய தெய்வாதீனமாகத் தப்பித்த - சமூக அறிவியல் புத்தகத்தில் இருந்து சில வரிகள். இதில் உள்ள சொற்பிழை, பொருட்பிழை, இலக்கணப் பிழைகள், சொற்றொடர் அமைப்புச் சிக்கல்கள் எதற்கும் நான் பொறுப்பில்லை. புத்தகம் முழுவதுமே ஒரு சிறந்த நகைச்சுவை நூலை வாசித்த உணர்வைத் தரும். படித்து சம்ச்சீர்க் கல்வியை சிப்பாய் சிரியுங்கள்

  • காமராஜர் தமிழக முதலமைச்சராக ஒன்பது ஆண்டுகள் பணியாற்றினார். பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்தினார். மதிய உணவுத்திட்டம், புதிய பள்ளிகளைத் திறந்து, இலவச கல்வி வழங்குதல், வேளாண்மையை மேம்படுத்துதல், கால்வாய்களை வெட்டுதல், அணைகளைக் கட்டுதல் மற்றும் புதிய தொழிற்சாலைகளை அமைத்தல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டார். தேசிய அரசியலில் முக்கிய பங்கு வகித்தார். இதனால் அரசரை உருவாக்குபவர் எனப் போற்றபட்டார்.
  • சாது மகாராஜா மூங்கிர் மாவட்டத்திலுள்ள செல்வச் செழிப்பான குடும்பத்தில் பிறந்தார். இவர் வைணவராக மாறினார். இவருக்குமுன் இவரது குடும்பத்தினர் அனைவரும் சைவ சமயத்தை சார்ந்து சிவனை வழிபட்டனர்.
  • சுற்றுச்சூழல் அனைவருக்கும் சொந்தமானது. ஒவ்வொருவரின் தேவையை பூர்த்தி செய்யக்கூடியதே அன்றி ஒவ்வொரு மனிதனின் பேராசைகளை அல்ல. பெருகிவரும் பேராசை நம்மை மிகவும் கடினமான சூழலுக்கு வெவ்வேறு பிரச்சனைகளாக கொண்டு செல்கிறது.
  • 1858ஆம் ஆண்டு நவம்பர் 1ம் தேதி இந்தியாவின் கடைசி தலைமை ஆளுநரும் முதலாம் வைசிராயும் ஆன கானிங் பிரபு அலகாபாத்தில் நடைபெற்ற மாபெரும் கூட்டத்தில் விக்டோரியா மகாராணியின் பேரறிக்கையை வெளியிட்டார். அது இந்திய மக்களின் மகாசாசனம் என்று கருதப்பட்டது. இப்பேரறிக்கையின் படி இந்தியாவின் ஆட்சிப் பொறுப்பை இனி இங்கிலாந்து அரசி நேரடியாக மேற்கொள்வார் என அறிவிக்கப்பட்டது. எனவே அவருக்கு பதிலாக அவரது பிரதிநிதி இந்தியாவின் ஆட்சிப் பொறுப்பை மேற்கொள்வார் என அறிவிக்கப்பட்டது.
  • கி.பி. 1939 முதல் கி.பி. 1945 வரை நடைபெற்ற இரண்டாம் உலகப்போர், உலகளாவிய ஒரு பெரும் போராக கருதப்படுகிறது.
  • ஹிட்லர் ஜெர்மனியின் பெருமையை வெளிப்படுத்தினார். ஜெர்மானியர்கள் உலகின் மிக உயர்ந்த இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பதில் அவர் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தார். நார்டிக் ஜெர்மானிய இனத்தினர் மிக உயர்ந்தவர்கள் என்றும், செமிடிக் யூதர்கள் மிகவும் தாழ்ந்தவர்கள் என்றும் கருதினார். நார்டிக் இனத்தின் தனித்தன்மையைக் காக்கும் பொருட்டு செமிடிக் யூதர்களை வெறுத்து ஒதுக்கினார். அவரது வெறுப்பின் உச்சக்கட்டமே யூதர்களின் படுகொலை ஆகும். ஹிட்லர் செயல்பாடு, வன்முறை தீவிரவாதம் ஆகியவற்றில் நம்பிக்கை கொண்டிருந்தார். மக்கலின் உரிமைகள் பறிக்கப்பட்டன… [மேலும் நீளும் இப்பகுதியின் தலைப்பு ஹிட்லரின் சாதனைகள்’]
  • கி.பி. 19-ஆம் நூற்றாண்டின் ஆட்சியாளர்கள் மற்றும் அறிவியல் அறிஞர்கள் எதிர்பார்த்த வண்ணம் உலக அமைதிக்கு ஏற்பட்ட பங்கமே முதல் உலகப்போர் என்று கருதப்படுகிறது.
  • பல மில்லியன் வருடங்களுக்கு முன்பு ஒரே ஒரு நிலப்பகுதிதான் இருந்தது. இதைச் சுற்றி பெருங்கடல்கள் சூழ்ந்திருந்தன. இவ்வாறு இருந்த நிலப்பகுதிக்கு பாஞ்சியாஎன்றும் அதைச் சுற்றியுள்ள நீர்ப் பகுதிக்கு பாந்தலாசாஎன்றும் அழைக்கப்பட்டது. இவ்வாறு பரந்த நிலப்பகுதி இரு பகுதிகளாகப் பிரிந்தது.
  • இராமகிருஷ்ண இயக்கம், இராமகிருஷ்ண பரமஹம்சரின் பெயரை அடிப்படையாகக் கொண்டு ஏற்படுத்தப்பட்டது. இது ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனம். சுவாமி விவேகானந்தர் என்பவரால் 1897 ஆம் ஆண்டு மே 1ம் நாள் துவங்கப்பட்டது.
  • வல்லரசு நாடுகளின் பெருந்தலைவர்கள் தங்களது கொள்கைகளை மறந்து போலியான அமைதி கொள்கையினைப் பின்பற்றினர். அவர்களது கொள்கையினை ஏகாதிபத்திய நாடுகள் ஏற்றுக்கொள்ள மறுத்தன. இது இரண்டாம் உலக போருக்கு வழி வகுத்தது.
  • பன்னாட்டு நிறுவனங்கள் என்பது பல நாடுகளில் தங்களது தொழிற் நிறுவனங்களை தொடங்கி நடத்தி வரும் அமைப்புகளாகும்.
  • பொருட்கள் என்பது உற்பத்தி செய்யப்பட்ட கார்கள், இரு சக்கர வாகனங்கள், கப்பல்கள், இரயில் எஞ்சின்கள், பேனா, பென்சில், அரிசி, கோதுமை மற்றும் சமையல் எண்ணை போன்ற பொருட்களைக் குறிக்கும்.
  • இந்திய மொழிகளின் வளர்ச்சி இந்திய இலக்கியங்கள் உன்னத நிலையை அடைய உதவுகின்றன.

இதைப்போல்தான் மற்ற புத்தகங்களும் தயாரிக்கப்பட்டிருக்கும். வரும் முன் காப்ப்தே நல்லதில்லையா.

நன்றி : writerpara

Saturday, May 14, 2011

சென்னைக்கு ஒரு புதிய காய்கறி மார்க்கெட்.




முன்பு கொத்தவால் சாவடியில் இருந்த காய்கறி மார்க்கெட் கோயம்பேடுக்கு மாற்றாப்பட்டது நாமெல்லாம் அறிந்ததே. தென்சென்னையில் இருக்கும் காய்கறி வியாபாரிகள் கோயம்பேடு வரை சென்று வருவது கடினமாக இருப்பதால் தென்சென்னையிலேயே கோயம்பேடுப் போல் ஒரு வணிக வளாகம் தங்களுக்கு தேவை என்று வியாபாரிகள் சங்கத்தினர் முறையிட்டிருந்தனர். இதைப் பற்றி ஜெயலலிதாவிடம் ஆறு மாதங்களுக்கு முன் மனு கொடுக்கப்பட்டது. தான் முதல்வரானால் முதல் காரியமாக 1000 கோடி செலவில் ஒரு நவீன காய்கறி சந்தையை அவர்களுக்கு வாக்களித்திருந்தார். அதன் பெயரில் நாளை முதல்வராக பதவியேற்றவுடன் ஏற்கனவே கட்டப்பட்ட நவீன காய்கறி மற்றும் பல்போருள் அங்காடியை தென்சென்னை காய்கறி வியாபாரிகளுக்கு கொடுக்கப்படும் என்று PTI செய்திக்குறிப்பொன்று தெரிவிக்கிறது. இந்தக் கட்டிடத்தை ஏற்க்கனவே பிரதமமந்திரி மன்மோகன் சிங் திறந்து வைத்தது குறிப்பிடத்தக்கது.புதிய கட்டிடத்தின் படங்கள் மேலே.