Wednesday, November 9, 2011

கூடங்குளம் சில பார்வைகள்




அன்பிற்க்கும் மரியாதைக்குரிய டாக்டர் அப்துல் கலாம் எழுதிய கட்டுரை, நீண்ட காலமாக எந்த பத்திரிக்கைகளிலும் இதுவரை வசிக்க வில்லை அற்ப்புதமாக இருந்தது. மயிர் கூச்சரிய வைத்தது.

இந்த கட்டுரையை மதிப்பீடு செய்ய நான் ஒரு அணு விஞ்ஞானி அல்ல என்ற போதும், இந்த கட்டுரை மற்றும் அணு சக்தி மீது பொதுவான என் எண்ணங்களை வெளிப்படுத்த விரும்புகிறேன்.

இன்னும் 20 - 30 வருடங்களில் மின்சார தேவை நாட்டின் பொருளாதாரத்திற்க்கு இன்றியமையாதது. நிலக்கரி மற்றும் பெட்ரோலிய பொருட்கள் போன்ற படிம எரிபொருட்களின் உபயோகத்தால் ஏற்ப்படும் சூழல் மற்றும் மாசு பிரச்சினைகள், இதற்க்கு மாற்றாக சுத்தமான சூரிய , காற்று மற்றும் அணு சக்தி தேவை , இதெல்லாம் சரிதான் அனால் எனக்கு சில கேள்விகள் இந்த கட்டுரையில் விளக்கபட்டாமலிருப்பதாக படுகிறது

உலகின் அணு விபத்துக்கள்

கடந்த 60 ஆண்டுகளில், 1957 ல் kyshtym முதல் இன்றைய Fukushima வரை உலகில் 4 முக்கிய அணு ஆலை விபத்துக்கள் நிகழ்ந்திருக்கின்றன. இதில் அமெரிக்கா மைல் தீவுகள் மற்றும் 1986 ஆம் ஆண்டு ரஷ்யாவில் நடந்த செர்னோபில் விபத்துக்கள் மனித பிழை காரணமாக நடந்து உள்ளன. மற்ற 2 விபத்துக்கள் இயற்க்கையால் ஆன விபத்துக்கள்.

உலக புள்ளிவிவரங்களை பார்த்தால் அடிப்படையில் 90% மனித பிழை காரணமாக உள்ளன என்று கூறப்படுகிறது. அறிவியல் முன்னேற்றத்தால் கட்டமைப்புக்கள் சரியாக இருந்தாலும் மனித பிழையால் உயிரிழப்புக்கள், சொத்து மற்றும் சுற்றுப்புற சேதாரம் முக்கிய பங்கு வகிக்கிறது.

மனிதப்பிழைக்கு இரண்டு உதாரணங்கள் போபாலில் யூனியன் கார்பைட் சம்பவம் மற்றும் மெக்ஸிக்கோ வளைகுடா சமீபத்திய எண்ணெய் கசிவு. அணு அல்லாத விபத்துக்கள் இவை என்றாலும் நாம் இன்றும் இந்த இரண்டு விபத்துகளுக்கும் வருந்திக் கொண்டிருக்கிறோம்.

நடந்த 4 அணு உலை விபத்துக்களில் இரண்டு மனிதப் பிழையால் நடந்திருக்கின்றன. இதில் மனிதனால் செய்யப்பட்ட பிழையன ஹிரோஷிமா நாகசாகியை சேர்க்கவில்லை

ஒரு அணு உலை என்பது கட்டுப்படுத்தப்பட்ட விளைவுகள் என்றாலும் மனிதனால் (பிழையால் மற்றும் பயங்கரவாதிகளால்) ஏற்பட்டாது என்பதற்க்கு ஏதேனும் அத்தாட்சி இருக்கிறதா.

தொழில்நுட்பம் மட்டுமே எல்லாம் செய்துவிடாது என்பது என் தாழ்மையான கருத்து.

60 ஆண்டுகளில் 441 அணு உலைகளில் 4 சம்பவங்கள் தான் என்பது ஒப்பீட்டளவில் மிகவும் சிறிய சதவீதம்தானே என்று விவாதிக்க முடியும். விமானம், தொழிற்ச்சலை, சாலை விபத்துக்களால் ஆயிரக்கணக்கானோர் உயிரிழக்கிறார்கள். இதனை ஒப்பிடும் போது அணு உலை விபத்துக்களால் ஏற்ப்படும் இறப்புக்கள் குறைந்ததாகவே புள்ளிவிவரங்கள் கூறுகின்றன, என்றும் விவாதிக்கலாம்.


அணுசக்தி அல்லாத மற்றும் அணுசக்தி நிகழ்வுகளுக்கு இடையில் ஒரு பெரிய வித்தியாசம் உள்ளது. அணுசக்தியில்லாத நிகழ்வுகள் ( போப்பால் தவிர்த்து) காலம் மற்றும் எல்லைக்கு உட்பட்டது. கதிர்வீச்சின் தலைமுறைகள் தாண்டியும் நெடுங்காலம் விளைவுகளை கொண்டிருக்கின என்பது மக்களின் நம்பிக்கை.

Chernobyl
சம்பவத்தால் அமுக்கி வாசிக்கப்பட்ட புள்ளிவிவரத்திலேயே பாதிக்கப்பட்டவர்கள் தொண்டை புற்று தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும் 7 லட்சம் மக்கள் இன்றும் புற்றுநோய் மற்றும் பிற சுகாதார விளைவுகள் அச்சுறுத்தல் நீடிக்கிறது. 150,000 ச.கி ரஷ்யப்ப்குதிகள் தாண்டி , 45,000 ச.கி. உக்ரைன் விவசாய பகுதிகள் பதிக்கப்பட்டிருக்கின்றன். இன்றும் அந்த நிலங்களில் விவசாயம் என்பது கனவாகவே இருக்கிற்து.

1987ல் Piper Alpha எண்ணெய் மற்றும் எரிவாயு ஆய்வு விபத்தால் 167 பேர் இறந்தார்கள், Chernobyl சம்பவத்தால்(50 பேர்) நேரடியாக இறந்தவர்களின் எண்ணிக்கையைவிட இது மிகவும் அதிகம். எனினும், 24 வருடங்களுக்கு பிறகும் லட்சக்ககணக்கான மக்கள் எந்த பின் விளைவுகள், கதிரியக்கம் மற்றும் புற்றுநோய் கவலையுடன் வாழவில்லை,


நிகழ்வுகள் Vs தாக்கம்:( Probability Vs Impact:)

பொறியியலில் இடர் பகுப்பாய்வில் (Risk Anlysis) ஒவ்வொரு சாத்தியமான ஆபத்து, நிகழ்வு Vs தாக்கம் நிகழ்தகவு ஆராயப்படும். இதில் சில சந்தர்ப்பங்களில் நிகழ்வுகள் அதிகமாக இருக்கும் ஆனால் பாதிப்பு குறைவாக இருக்கும். சில சந்தர்ப்பங்களில், நிகழ்வுக்ள் குறைவாக இருக்கம் ஆனால் தாக்கம் அதிகமாக இருக்கும்.

அணுசக்தி ஆலைகளை எடுத்துக்கொண்டல் நிகழ்வுகள் மிக மிக குறைவாக இருக்க ஆனால் தாக்கம் மிக அதிகமாக முடியும். கலாம் அய்யா கூடங்குளம் நிகழ்வு தாக்கம் பகுப்பாய்வு அறிக்கையை ஆராய்திருப்பார் என்று நம்புவோம்.ஆனாலும் நிகழ்வுகள் தனிப்பூஜ்யமாக (absolute zero) இருக்க வாய்ப்புக்கள் இருக்கின்றனவா என்ன. அப்படியிருக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவோம்.

மேலும் கட்டப்பட்டிருக்கும் அணு உலை யுரேனியத்தை அடிப்படை எரிபொருளாக கொண்டு கட்டப்பட்டுள்ளது, எனவே தோரியம் பாதுகாப்பு அம்சங்கள் இதற்க்கு பொருந்தாது. இன்னும் பத்து வருடங்கள் கழித்து தோரியம் எரிபொருளுக்கு மாறினால் நாங்கள் இன்னுமொரு கலாம் அய்யாவிற்க்கு எங்கே போவது... இதையும் அப்பொழுதைக்கு இப்போதே செய்தால் நலம்.