Sunday, August 16, 2009



நான் நைஜீரியாவில் இப்போது வசிக்கிறேன். நைஜீரியாவை பத்து முறைக்கு மேல் சுற்றிவிட்டேன். நைஜீரியா உலகின் கச்சா எண்ணை உற்ப்பத்தியில் நான்காம் இடம். OPEC எனப்படும் எண்ணை உற்ப்பத்தி செய்யும் நாடுகளின் உறுப்பினர். இந்த எண்ணை வளத்தை முறையாக உபயோகபடுத்தியிருந்தால் நைஜீரியா முன்னேறிய நாடுகளின் வரிசையில் இருந்திருக்கும். ஆங்கிலேய காலனி ஆதிக்த்திலிருந்து விடுதலை அடைந்தபின் பல்வேறு ராணுவ ஆட்சியாளர்களால் சிதைந்து சின்னாபின்னமாயிருக்கிறது. இப்போது ஜனநாயக ஆட்சி நிலவுகிறது அது நீடித்தால் வளமாக வாய்ப்பு இருக்கிறது.கச்சா எண்ணை உற்ப்பத்தி செய்தாலும் எண்ணை சுத்திகரிப்பு ஆலைகள் இல்லாததால் கச்சா எண்ணையை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு மீண்டும் பெட்ரோலிய பொருட்களாக இறக்குமதி செய்வதால் தானிக்கு தீனி சரியாகிறது. எண்ணை சுத்திகரிப்பு ஆலை ஒன்றை இப்போது கட்டி வருகிறார்கள் பார்ப்போம் .இங்கு பெட்ரோலின் விலை நம் ஊர் மதிப்புபடி 23ரூ.corruptionஇல் உலக வரிசையில் 3வது இடம் பிடிக்கிறது. லஞ்சம் வாங்குவது இங்கு சட்டபூர்வம். எந்தவித கூச்சமுமின்றி வாங்குகிறார்கள்.வாழ்வதற்கான விலை(cost of Living) இந்தியாவைவிட மூன்று மடங்கு அதிகம். ஆனால் வாழ்கைதரம்(Standard of Living) இந்தியாவைவிட அதிகம். கார்கள் அதிகம் புழங்குகிறது. இங்கு வேலைகாரியிலிருந்து குப்பைகாரன் வரை அனைவரும் ஆங்கிலம் பேசுகிறார்கள்.அதேபோல் இங்கு கல்விதரம் என்னை பொறுத்தவரை இந்தியாவை விட தரம் என்றே சொல்வேன். மேலைநாடுகளில் இந்த கல்வியின் Accredition இந்தியாவை விட அதிகம். உதாரணம் இங்கு டாக்டர் பட்டம் பெற்ற ஒருவர் இங்கிலாந்தோ அமெரிக்காவோ சென்றால் அங்கு அப்படியே எடுத்துகொள்கிறார்கள். ஆனால் இந்தியாவில் டாக்டர் பட்டம் பெற்ற ஒருவர் இங்கிலாந்து சென்றால் அங்கு ஒரு தேர்வு எழதிதான் டக்டர் ஆக முடியும்.இங்கு கச்சா எண்ணை உள்ள நைஜர் டெல்டா ஒரு காஷ்மீர். எண்ணை எடுக்கும் அயல் நாட்டு நிறுவனங்கள் (Shell,Mobil,Chevron,adax,...) எண்ணை எடுத்து தங்கள் நாட்டை செம்மை செய்கிறார்களே தவிர தங்கள் மாநிலங்களுக்கு ஒரு மண்ணும் செய்வதில்லை என்ற கோபத்தின் வெளிப்பாடே இங்கிருக்கும் தீவிரவாதம். இந்த தீவிரவாதத்தின் முக்கிய அங்கம் வெளிநாட்டவரை கடத்தி பணய தொகை பெறுவது. உலகில் தீவிரவாதம் அல்லது போர் நீடிப்பது சில நாடுகளுக்கு நல்லது. சமாதானத்தை தீவிரமாக விரும்பும் ஜப்பான்தான் துப்பாக்கி உற்பத்தியில் முதல் இடம். போகட்டும்.இங்கு Armed Roberry என்பது சர்வ சாதாரணம். நவம்பர்,டிசம்பர் மாதங்களில் உச்சத்தில் இருக்கும். நானே மூன்று நான்கு முறை Armed Roberry பார்த்திருக்கிறேன், என்ன ஒன்று கேட்டதை மறுக்காமல் கொடுத்துவிட்டால் அவர்கள் நல்லவர்கள் இல்லை டுமீல்தான். சூடு வாங்கிய இந்தியர்களை எனக்கு தெரியும்.மற்ற மேற்கு ஆப்பரிக்க நாடுகளைவிட இங்கு இந்தியர்கள் அதிகம்.நான் இருப்பது லேகோஸ்(Lagos) என்னும் இடம். நமது மும்பையை போல் வர்தக தலைநகரம். முன்பு நாட்டின் தலைநகரமாக இருந்தது இடநெருக்கடி காரணத்தால் 15 வருடங்களுக்கு முன்பு நாட்டின் மையத்தில் அபுஜாவிற்கு குடி பெயர்ந்தார்கள் ஆட்சியர்கள். லாகோஸ் மற்றும் வடக்கே கனோவிலும் இந்தியர்கள் அதிகம். நைஜிரியாவில் மொத்தம் இரண்டு லட்சம் இந்தியர்கள் இருக்கிறார்கள். இங்கு இந்தியர்களுக்கு பொதுவாக ஒரு ஆறு இருக்கும் கோவில்கள் உள்ளன. தமிழ் சங்கம், கேரளா சங்கம், ஒரிய சமாஜ், துளு சங், என்று இந்திய மாநிலவாரியாக சங்கங்களும். நாகராஜ் தமிழ் சங்கம், சுப்பிரமணி தமிழ் சங்கம் என்று சங்கத்துக்குள் சங்கங்களும் இருக்கின்றன. அவரவர்கள் பண்டிகையை அந்தந்த சங்கங்கள் கோயில்களிலோ அல்லது பொதுவான ஒரு இடத்திலோ நடத்துவார்கள். தீபாவளி மேளா மிக விமர்சையாக கொண்டாடப்படும். இங்கிருக்கும் இந்தியர்கள் 80% குடும்பத்துடன் இருக்கிறார்கள். கம்பனி செலவில் ஒரு வீடு(குறைந்த பட்சம் 1500 சதுரடி), வாகனம், வண்டியோட்டி, குழைந்தைகள் பள்ளி கட்டணம், வீட்டு காவலாளி, வேலைக்காரி(சமைக்க, பத்திரம் கழுவ, துணி துவைக்க, குழ்ந்தைகளை பார்த்துக்கொள்ள) , மின்சார கட்டணம் ,மற்றும் பல. இங்கு வேதிகாவை போல் வரும் பெண்கள் குஷ்புவை போல் ஆவது உறுதி. இதை தவிர இந்திய தூதரகத்தில் jan 26, aug 15 கொடியேற்றி சிற்றுண்டி கொடுக்கிறார்கள். இங்கிருக்கும் இந்திய பள்ளியில் CBSE வழி கல்வி கற்பிக்க படுகிறது. LKG முதல் +2 வரை இருக்கிறது. சென்னை பள்ளிகளை விட தரமயிருக்கிறது. இங்கு corruption என்பது 10 பில்லியன் டாலர்கள் என்பது சகஜம்.சுரண்டப்படும் பணம் சுவிஸ் வங்கியில் வருட கணக்கில் தூங்கி நாட்டிற்க்கும் பயன்படாமல், சொந்தக்காரர்களுக்கும் பயன்படாமல் சுவிஸ் மக்களை செழிக்க செய்கிறது.இங்கு இந்தியர்களை அடுத்து அதிகம் இருப்பது லெபனீயர்கள். .இவர்கள் வடக்கிலிருந்தும் இந்தியர்கள் தெற்க்கிலிருந்தும் குத்தகை எடுத்து வர்தகம் செய்கிறார்கள்.நான் இருக்கும் இடத்தில் மழை மாதம் மும்மாரி பெய்கிறது. மற்றபடி சென்னையின் சுட சுட சீதோஷன நிலைதான். இங்கு ஆங்கிலம் தவிர மூன்று மொழிகள் பிரதானமாக பேசக்கூடியவர்கள். அவை யுரூபா,ஈபோ மற்றும் ஹவுஸா. ஹவுஸா பேசுபவர்கள் அனைவரும் முஸ்லிம்கள்(99.99%) வடக்கு பகுதியில் வசிக்கிறார்கள். ரொம்ப சோம்பேறிகள் மற்றும் இவர்கள் தான் எப்போதும் ஆட்சியாளர்கள். ஆதலால் சொகுசு பேர் வழிகள். ஹவுஸா அல்ஹாஜிக்கள் கணக்கில்லாமல் பணம் மற்றும் மனைவிகள் வைத்திருப்பார்கள். நாற்பது ஐம்பது குழந்தைகள் பெற்று போடுவார்கள்.ஏழை அல்ஹாஜிக்கள் பெற்ற பிள்ளைகளுக்கு தட்டை கொடுப்பார்கள் பிச்சை எடுப்பதற்கு.ஈபோக்கள் கிழக்கு பிராந்தியர்கள் வர்த்தகத்தில் சிறந்தவர்கள். நம்ப ஊர் சேட்டுக்களை போன்று படிப்பில் அதிக ஆர்வமற்றவர்கள் வியாபாரம் தான் முழு மூச்சே. நைஜர் டெல்டா (எண்ணை கிணறுகள்) தங்களுக்கே சொந்தம் என்று பிரிவினைவாதம் பேசுபவர்கள்.யுருபாக்கள் நம்போல்வார்கள் மெத்த படித்த மேதாவிக்கள் ஆதலால் ஆட்சியாளர்களாகவும் இல்லாமல் வியாபாரிகளாகவும் இல்லாத தூக்கு தூக்கிகள்.இவர்களில் 50% முஸ்லிம்கள் 50% கிறுஸ்துவர்கள். இவர்கள் மேற்க்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் வசிப்பவர்கள்.
நைஜீரியாவில் இனக்கலவரங்கள் என்பது கிரகணங்கள் போல் சூரியனை பூமி சுற்றி வருவது போல் ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும்.
1953ல் ஆரம்பித்தது இந்த கலவரங்கள், இன்று வரை தொடர்கிறது. வடக்கே வாழும் ஹவுஸா இனத்தவர்கள் அனைவரும் முஸ்லிம்கள் ராணுவ ஆட்சியாளர்களில் ஆரம்பித்து இன்று யரடுவா வரை வடக்கத்தவர்கள் தான் எப்போதும் ஆட்சியாளர்கள். இதற்க்கு காரணம் ஆங்கிலேய ஆதிக்க ஆட்சியாளர்களின் பிரித்தாளும் சூழ்ச்சி. ஆரம்பத்தில் ஆங்கிலேயர் ஆட்சியை கடுமையாக எதிர்த்தது வடக்கு முஸ்லிம்கள்தான், பிறகு ஆங்கிலோ-ஃபுலானிகள் இணைந்து நைஜீரியாவையே கட்டியாண்டார்கள். 1960ல் நைஜீரியா விடுதலை அடைந்தது. 1967-70 வரை நடந்த உள்நாட்டு போருக்கும்(Biafra Civil War) இன கலவரங்களுக்கும் நிறைய சம்மந்தம் உண்டு.
நைஜீரியாவின் வடக்கு பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இஸ்லாமிய ஷரியா சட்டம் நடைமுறையில் இருக்கிறது. வடக்கு பகுதியில் ஜாஸ் (Jos) என்று ஒரு நகரம் இருக்கிறது. இது ஒரு மலை பகுதி, நமது ஊட்டி, டார்ஜிலிங் போல் ஆங்கிலேயர்களின் விடுமுறை கழிக்கும் இடமாக இருந்தது. இது கிறுஸ்துவர்கள் அதிகம் இருக்கும் இடம். நைஜீரியாவின் கலவரங்கள் ஆரம்பிக்கும் இடமும் இதுவாகத்தான் இருக்கும். 2001,2003,2004ல் நடந்த கலவரங்களின் ஆரம்ப இடமும் ஜாஸ்தான். இங்கு பெரும்பாலும் நடக்கும் கலவரங்கள் மத கலவரங்களைவிட இனக்கலவரமாகவே இருக்கும். ஹவுஸா ஃபுலானிகளுக்கும் யூருபா, இபோ இனத்தவரிடையே நடக்கும் போரட்டம்தான் இந்த கலவரங்கள். ஹவுசா இனத்தவர்கள் மிகவும் சதுவானவர்கள், கலவரம் வந்துவிட்டால் யுருபா நண்பன் முஸ்லிமாக இருந்தால் கூட அவர்களை போட்டு தள்ளிவிடுவார்கள். சது மிரண்டால் காடு கொள்ளாததற்கு சிறந்த உதாரணம் ஹவுஸாக்கள்.நான் 2005-2007வரை வடக்கு நைஜீரியவில் கானுவில் இருந்தேன். நான் அங்கு இருந்தவரை இஸ்லாமிய இயக்கங்கள் நாளடைவில் தீவிரமடைந்தாது போல் ஒரு உணர்வு எனக்கு எப்போதும் உண்டு. இந்த காலகட்டங்களில் நைஜீரிய தாலிபான் இயக்கமும் வளர்ந்திருக்க வாய்ப்புகள் அதிகம். இந்த முறை நடந்த கலவரத்தில் நான் சேகரித்த தகவல்களின் அடிப்படையில் சுமார் 1500 பேர் இறந்திருப்பார்கள். இந்த நைஜீரிய தாலிபான் இயக்கத்தின் பெயர் Boko haram என்றால் மேற்கத்திய கல்வியை எதிர்ப்பது என்று அர்த்தம். குரானில் கூறியிருக்கும் முட்டாள்தனத்திற்க்கு ஷரியாவின் பெயரில் அர்த்தம் தேடும் இயக்கம். இவர்களின் முட்டாள்தனத்தால் எவ்வளவு உயிர்கள் பலி!இங்கு மின்சாரம் ஒரு நாளில் 3 அல்லது 4 மணி நேரம் இருந்தால் நாம் பாக்யசாலிகள். ஜெனரேட்டர் வீட்டுக்கு வீடு எப்போதும் ஓடிக்கொண்டிருக்கும். NEPA என்பது Nigerian Electric Power Authority இதை இவர்கள் Never Ending Problem Always என்பார்கள். NEPAவை அரசு PHCN (Power Holding Corporation ofNigeria) தனியார் துறைக்கு விற்றது ஆனாலும் அதே பழைய குருடி கதவை திறடி கதைதான், இப்போது PHCNயை Problem Has Changed Name என்று குறிப்பிடுகிறார்கள்.மின்சார கதைதான் தொலைபேசிக்கும், தண்ணீருக்கும், போக்குவரத்துக்கும் (நம்ம ஊர் நாய் வண்டிதான் இங்க பஸ்) மக்கள் லோல்படுகிறார்கள். தனியார்கைபேசியில் MTN (நம்ம ஊருல கொஞ்ச காலமா அடி படுகிற தெனாப்பரிக்க நிறுவனம்) 70% சந்தையை ஆக்ரமித்துக்கொண்டு நம்ப ஊர் மதிப்புபடி நிமிடத்திற்க்கு 15ரூ இருந்து 20ரூ வரை பிடுங்குகிறார்கள். CDMAவும் உண்டு ஆனால் எல்லா ஊர்களிலும் இல்லை. காசு கொடுத்தாலும் சேவை ஒன்றும் பிரமாதம் இல்லை.இங்கு தேர்தல்கள் எல்லாம் கூதல்தான். கள்ள ஓட்டு, வாக்கு சாவடியை கைபற்றுதல் போன்றவை நடந்தாலும் ஜிம்பாப்வேயின் ராபர்ட் முகாபே போல் அல்லாமல் தேர்தல் முடிவுகளை வெளியிட்டு ஜனநாயகத்தை காப்பவர்கள். ஜனநாயகம் இப்போது கொஞ்சம் தழைத்தோங்குகிறது. எண்ணையை விற்று நாட்டு நலனில் அக்கறை காட்டினால் நாடு முன்னேற ரொம்ப வாய்ப்பு உள்ளது.வாழ்க நைஜீரியா வளமுடன்!!!( அப்பதான நாங்க வளமுடன் வாழ முடியும்.)

No comments: