Tuesday, September 9, 2008

சுரண்டல்


சுரண்டலில்(Corruption) இந்தியா 2007 விட இந்த வருடம் முன்னேறியுள்ளதாம். Transparency International என்னும் ஒரு சர்வதேச தனியார் நிறுவனம் எடுத்த ஆய்வின் முடிவு இது. கம்மியாக சுரண்டுவதிலிருந்து அதிகமாக சுரண்டப்படும் வரிசையில் இந்தியா 74வது இடத்தை பிடிக்கிறது. அமெரிக்கா 20வது இடத்தில் உள்ளது.
டென்மார்க்,ஃபின்லாண்ட்,நியூசிலாண்ட்,சிங்கப்பூர் மற்றும் சுவீடன் பட்டியலில் முதல் ஐந்தெடத்தை பெறுகிறது.
The Transparency International (TI) என்னும் அரசு சாரா தன்னிச்சையான நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் சுரண்டலை உலகெங்கிலும் வெளிச்சத்திற்கு கொண்டுவருகிறது. 1995ல் ஆரம்பிக்கபட்ட இந்த பட்டியல் ஆண்டாண்டுகளாக வெளியிடபட்டு இன்றுவரை தொடர்கிறது. இந்த ஆண்டு 180 நாடுகளின் சுரண்டல் பட்டியலிலிருந்து சில.
நம் அண்டை நாடுகளான பாக்கிஸ்தான் 140 வது இடத்திலும். சீனா 73வது இடத்திலும் இருக்கிறது.
இரான்,லிபியா மற்றும் நேபாள் முறையே 133,134,135வது இடத்தை பிடிக்கிறது. ரஷ்யா 145வது இடத்திலும்,ஸ்ரீலங்கா மற்றும் மாலத்தீவு 96 மற்றும் 90 வது இடத்திலும் இருக்கிறது. சிங்கப்பூருக்கு அடுத்து ஆசியாவில் கம்மியான இடத்தை பிடித்திருப்பது பூட்டான் 41வது இடம்.
லஞ்சம்,ஊழல் நம்ம நாட்டுக்கும் மேலை நாடுகளுக்கும் உள்ள வித்யாசம் நம்மவர்கள் அன்றாடம் செய்ய வேண்டிய கடமைகளுக்கே பணம் வாங்கிக் கொண்டு செய்கிறார்கள் மேலை நாடுகளில் அன்றாட கடமைகளுக்கு லஞ்சம் வாங்குவதில்லை, அசாதாரண வேலைகளுக்கு வாங்குகிறார்கள். இதனால் நம் நாட்டில் ஊழலும் லஞ்சமும் புரையோடி அடி வேர்வரை சென்றுவிட்டது. இந்தியா போய் இறங்கியவுடன் சுங்க அதிகாரிகள் காரணமேயில்லாமல் 100 டாலருக்கு பிச்சை எடுப்பார்கள். ம்ம்ம்ம்ம்ம்

சாரே ஜகான்ஸே அச்சா! வந்தே மாதரம்.

No comments: