Thursday, September 11, 2008

மர்மயோகி




பிரமிட் சாய்மிரா மற்றும் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிக்கும் “மர்ம யோகி” யின் கதை,திரைக்கதை, வசனம், இயக்கம் மற்றும் நடிப்பு நான் விரும்பும் கமல் (தலைவா தசாவதாரம் போல சொதப்பிடாத). இந்த படத்தின் பட்ஜட் 120கோடியாம். நான்கு மொழிகளில் தமிழ்,தெலுங்கு,மலையாளம் மற்றும் இந்தியில் தயாராகிரான் மர்மயோகி .திரிஷா கதாநாயகியாக நடிக்கிறார் (படத்துல குளிக்கிற ஸீன் இருக்கா) திரிஷா அம்மா அவங்க பாவாடை சட்டை போட்ட காலத்திலிருந்தே கமலின் ரசிகையாம், திரிஷா கமலுக்கு ஜோடியாக நடிப்பதில் அம்மாவிற்கு ரெட்டிப்பு சந்தோஷமாம். ஷ்ரேயா சரணும் இந்த படத்தில் நடிப்பது இப்போது புது செய்தி (மீண்டும் திரிஷாவுக்கு 40, ஷ்ரேயாவுக்கு 38 திரும்புகிறது). ஹேமமாலினியும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம்.
படம் 7வது நுற்றாண்டு கதையாம். இந்த படத்தில் Redone Camera என்னும் புதுவித கேமராவை உபயோகிக்க போகிறாராம் கமல். இதனால் படம் துல்லியமாக 4096x2304 ரெஸல்யூஷனில் படமெடுக்குமாம். மேலும் Harddiskல் பதிவு செய்யும் வசதியும் இதில் உண்டு என்பதால் ஃபிலிம் செலவு மிச்சம்.
படத்திற்கு இசை இசைஞானியல்ல இந்த முறை ஏ.ஆர்.ரகுமான். இது ஒரு பீரியட் படமாதலால் ஏ.ஆர்.ரகுமான் இசை ஆராய்சியில் இறங்கியுள்ளாராம். படத்தை பல அழகிய இடங்களில் படமாக்க உள்ளார்களாம், சுவீடனில் முக்கிய காட்சிகளை எடுக்கிறாராம் கமல் (தலைவா ஜெனீவா பக்கம் போய்டாதே அங்கதான் LHC இருக்கு).

No comments: