Thursday, September 11, 2008

Large Hardon Collider (LHC)




பிக் பேங் விதிப்படி விரிவடையும் பிரபஞ்சத்தைப்(Big Bang Theory of Expanding Universe) பற்றி கேள்வி பட்டிருக்கீற்களா. பிரபஞ்சம் உருவான கதைதான் இந்த விதி.
இந்த விதி பல விஞ்ஞனிகளால் பரவலாக ஒத்துக்கொள்ளப்பட்ட பிரபலமான விதி. இந்த விதி படி 13.7 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு நேரத்தில் ஒன்றுமே இல்லை அப்படியென்றால் பிரபஞ்சமில்லை, கோள்கள்லில்லை எதுவுமே இல்லை. பிறகு எப்படி பிரபஞ்சம் பிறந்தது என்ற விளக்கம் தான் பிக் பாங் விதி. சரி இந்த விதி என்ன சொல்கிறது என்றால் ஒரு அணுவைப் போன்று ஒரு பருப்பொருள் விரிவடைந்து, விரிவடைந்து நாமிருக்கும் பிரபஞ்சம் உருவானதாக கூறுகிறது. பிரபஞ்சம் இன்னும் விரிவடைந்து கொண்டே போகிறது என்று கூறுகிறார்கள் விஞ்ஞனிகள். ஒரு பலூனில் பேனாவால் சில புள்ளிகள் வைத்து ஊதினால் என்னவாகும். புள்ளிகளின் இடைவெளி அதிகரிக்குமில்லையா அதைப்போல பிரபஞ்சத்தில் உள்ள வெளிகள்(Galaxies) விலகி போவதை ஆராச்சியாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். 1965ம் ஆண்டில் ஆர்னொ பென்சியாஸ் மற்றும் ராபர்ட் வில்சன் என்ற விண்வெளி விஞ்ஞானிகள் பிரபஞ்சம் விரிவடைவதால் அது வெளியிடும் சக்தி 270.425 செல்சியஸ் என்று கணக்கிட்டிருக்கிறார்கள்.
சரி இத்தனையும் எதற்காக என்றால் நேற்று சுவீடனிலுள்ள ஜெனீவாவில் ஒரு ஆராய்ச்சி நடந்திருக்கிறது. இது வரை மனிதனால் உருவாக்கப்பட்ட மிகப்பெரிய, மிகசக்திவய்ந்த, மிகவும் விலை உயர்ந்த எந்திரத்திற்கு Large Hardon Collider(LHC) என்று பெயர் (ஷங்கர் 2010ல் அதைவிட பெரிய எந்திரத்தை வெளியிடுகிறார் அதன் பெயர் சுப்பர் ஸ்டார் ரஜினி). இந்த Large Hardon Collider ஒரு பெரிய 27கி.மீ வட்ட வடிவு எந்திரம் முனைகள் மூடாமல் இருக்கும். இந்த எந்திரம் தயாரிக்க ஆன செலவு 5பில்லியன் பவுண்டுகளாம். மேலும் இதை இயக்க தேவைபடும் சக்தியின் மதிப்பு 30மில்லியன் டாலர்களாம். சரி இந்த கருவி என்ன செய்யும் என்றால். ப்ரோட்டான்களை உற்பத்தி செய்து ஒளியின் வேகத்தில் அதை செலுத்தும். செலுத்தி ப்ரோட்ன்களால் இரண்டு பக்கமும் அணுவை மோத செய்யும். இந்த ஆராய்சியினால் என்ன கண்டறிகிறார்கள் என்றால், நான் முன்பு சொன்னது போல் 13.7 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் ஒரு அணு விரிவடைய ஆரம்பித்த அந்த நொடியை இப்போது கொண்டு வந்திருக்கிறார்கள். நேற்று மெல்பர்ன் மாலை 5 மணிக்கு சரியாக இந்த இயந்திரத்தை இயக்கி ஆராய்ந்திருக்கிறார்கள். பிரபஞ்சத்தை பற்றி பல முக்கிய தகவல்கள் கிடைக்கும் என்று கூறுகிறார்கள்.
Large Hardon Collider க்கு எதிர்ப்புக் கூட ஏராளமாக இருந்தது. LHC யால் ப்ரோட்டான் அணு பிளக்கும் 1/20 விநாடியில் பூமி பிளந்து அழியும் என்று ஒரு சாராரும். நுண்ணிய கருப்பு ஓட்டைகள் பிரபஞ்சத்தில் தோன்றும், LHC பிளக்கும் அணுவின் சக்தி 2 ட்ரில்லியன் செல்சியஸ் (ஆதாவது சூரியனின் மைய்ய பகுதி வெப்பத்தை விட ஒரு லட்சம் மடங்கு அதிகமாம்.) வெப்பம் வெளிபடும் இதனால் கடல்கள் பொங்கும் என்று மற்றொரு சாராரும் கூறுகிறார்கள். காசு செலவழித்து செய்யப்படும் இந்த ஆராய்ச்சியால் ஒன்றும் கண்டுபிடிக்க முடியாது என்றும் கூறுகிறார்கள். இதுவரை பூமி பிளக்கவில்லை, தப்பித்தோம். மேலே என்ன நடக்கிறது என்று பார்க்கலாம்.
நமக்கு இதெல்லாமா ஒரு கவலை மேலே படியுங்கள். நம்ம கமலை பத்தி.

No comments: