Tuesday, July 15, 2008

குசேலன்






குசேலன் படபிடிப்பு முடிந்து பூசணிக்காயும் உடைத்தாயிற்று, இசை வெளியீட்டு விழாவும் சென்னை லீமெரிடியனில் இனிதே நடந்தேரியது. “கதா பரையும்போள்” என்ற மாலையாள படத்தின் காப்பிதான் “குசேலன்” தெலுங்கில் “கதாதாநாயகுடு”. பி.வாசு சொந்தமாக கதை பண்ணி ரொம்ப காலமாயிற்று, எல்லாம் சுட்ட பழம் தான். சந்திரமுகியில் சொதப்பியிருப்பது போல் சொதப்பாமல் இருந்திருந்தால் சரி. கதா பரையும்போளில் மம்முட்டி பதினாறு நிமிடங்கள் வந்த கதாபாத்திரத்தில் ரஜினி ஒரு அரை படமாவது வருவார் என்று நினைக்கிறேன். கதை எனக்கு தெரிந்தவரை மகாபாரத கதைதான், வியாசருக்குதான் ராயல்டி கொடுக்க வேண்டும். குசேலனை மன்னிக்கவும் கதா பரையும்போளை இந்தியிலும் கன்னடத்திலும் தயாரிக்க போகிறார்கள். ரஜினியின் மன்னிக்கவும் மம்முட்டியின் கதாபாத்திரத்தை இந்தியில் ஷாருக்கானும் கன்னடத்தில் ரமேஷ் அரவிந்தும் செய்யப்போகிறார்கள். குருவான பாலசந்தருக்காக குரு தட்சணையாக (தட்சணை வாங்கிகொண்டுதான்) இந்த படத்தில் நடித்து கொடுத்திருக்கிறார் ரஜினி. பாலசந்தருக்கு கமலும் ரஜினியும் சிஷ்யர்கள் ஆயினும் குருவிற்கு தெரியும் யாரிடம் குரு தட்சணை கேட்டால் காசு பேறும் என்று. பாதி படம் வருகிற ரஜினிக்கு தான் விளம்பரங்கள். முழ படமும் வருகிற பசுபதிக்கு இருட்டடிப்பு அந்த கடுப்பில் இருப்பதாக தகவல்.
ஆனால் ஒன்று மட்டும் உறுதி இந்த படம் “ Box Office Hit”
உங்கள் பார்வைக்கு சில படங்கள் மேலே.

No comments: