Tuesday, July 8, 2008

தசாவதாரம்

நான் கமலின் தீவிர ரசிகன். கமலின் புதிய முயற்சிகளுக்கு
என் ஆதரவு எப்போதும் உண்டு. ஆனால் கமல்
தசாவதாரத்தில் பயங்கரமாக சொதப்பிவிட்டார். "தசா"
அவதாரத்தில் கமலின் தேவையற்ற ஐந்து அவதாரம். Sliding
Door என்ற ஆங்கிலப்படத்தின் நகலை 12Bயில் ஜீவா எடுத்த
படத்தின் அடிப்படை "கேயாஸ் தியரி". 12ம் நூற்றாண்டில்
கடலில் போட்ட ரங்கநாதரால் 25 டிசம்பர் 2004ல் வந்த சுனாமி
கேயாஸ் தியரியின் அடிப்படை என்றாலும் திரைக்கதையில்
அதன் சாயல் கூட தெரியவில்லை. கமலின் பத்து
வேடங்களில் பிளச்சர், பாட்டி, கலிப்புல்லா,ஜப்பானியர் ம்ற்றும்
புஷ் ஆகிய கதாபாத்திரத்தின் ஒப்பனைகள் Maskல் வரும் ஜிம்
கேரியை போல் அசிங்கமாக இருந்தது. மற்ற கமல்கள்
தேவலாம். ஒப்பனையின் அளவின் மிகுதியால் கமலின் Facial
Expressions கொஞ்சம் கூட இல்லாமல் செத்த பிணம் போல
வந்து சென்றிருக்கிறார். என்னால் ஜீரணிக்க முடியாத விஷயம் பெருமாள் சிலையை தூக்கிப்போட்டு பந்தாடியது.
பாடல்களும் கை கொடுக்கவில்லை கமலுக்கு என்ன ஈகோவோ நம்ம ஊருல இல்லாத இசையமைப்பாளரா , ஹிமேஷை போட்டிருக்கிறர். அவர் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழாவிற்க்கு கூட வரவில்லை.
ஜாக்கிசான் பாவம் படத்தை பார்த்துவிட்டு வேற வழியில்லாமல்
பாடாவதி படத்தை சூப்பர் ன்னு சொல்லியிருப்பாரோ. இனிமே
மல்லிகா ஷெராவத்தை கண்டால் ஓடி ஒளிஞ்சிப்பார். பாவம்
மல்லிகா ஷெராவத் தசாவதாரத்தால் ஹாலிவுட்
வாய்ப்புக்களை இழக்கிறார். "Oscar" என்பது "Ascar"
ஆனதுபோல் "தசாவதாரம்" "புஸ்ஸாவதாரம்" ஆனது பரிதாபம்.
கடவுள்னு ஒருத்தர் இருந்தே ஆகணும் ரவிசந்தரனை காப்பாத்திட்டார். ஹேராம், குருதிபுனல் கொடுத்த கமலா இது. இந்த கிறுக்கல் மூலம் நைஜீரியாவிலிருந்து ஒரு தும்மல் தும்மிவிட்டேன் அது ஆழ்வார்பேட்டையில் ஒரு இடி இடிக்கட்டும். அதுதானே
பட்டர்பிளை எஃபக்ட். "தசாவதாரம்" "ரசவாதம்".

No comments: